.

திருமூலர் வரலாறு

திருமூலர் வரலாறு குறித்தும் பாயிரப் பகுதியில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமூலர் பெரியபுராண நாயன்மார் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். இவர் வரலாற்றைப் பெரியபுராணமும் எடுத்துரைக்கிறது. வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த முனிவர் ஒருவர் மாடு மேய்க்கும் ஓர் இளைஞன் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மூலன் எனப் பெயர் பெற்றார். திருவாவடுதுறையில் யோகத்தில் பலகாலம் இருந்து இத்திருமந்திரமாலையை உலகுக்கு வழங்கினார். திருமூலரே,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே


என்று குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

என்ற அரிய தொடர் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

.

Popular posts from this blog

TAMIL NADU Seventh MATHEMATICS, SCIENCE AND SOCIAL SCIENCE BOOK FREE DOWNLOAD | TAMIL NADU 7TH MATHEMATICS, SCIENCE AND SOCIAL SCIENCE BOOK FREE DOWNLOAD

TAMIL NADU Sixth MATHEMATICS, SCIENCE AND SOCIAL SCIENCE BOOK FREE DOWNLOAD | TAMIL NADU 6TH MATHEMATICS, SCIENCE AND SOCIAL SCIENCE BOOK FREE DOWNLOAD