.

கால்டுவெல் குறிப்பு


கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது. இளமைக் காலம்
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது. பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.

.

Popular posts from this blog

Tamilnadu SIXTH all books free download, Tamilnadu 6th all books free download

Tamilnadu FIRST STANDARD all books free download, Tamilnadu 1ST STANDARD all books free download