Posts

Showing posts from November, 2015

.

Vikrama Simhapuri University M.B.A and M.C.A Revaluation Exam Result 2015

TAMILNADU DIPLOMA RESULTS OCTOBER 2015

DIPLOMA RESULTS TAMIL NADU ALL DIPLOMA RESULTS AVAILABLE HERE


LINK 1

LINK 2

LINK 3


பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 30

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 30


             TECHNICAL ANALYSIS இல் பார்க்க வேண்டிய விசயங்களில் அநேகம் உண்டு, இருந்தாலும் தடை இன்றி வர்த்தகம் செய்வதற்கும், புதிதாக ஒரு பங்கை தேர்ந்தேடுப்பதற்க்கும், அந்த பங்கின் இலக்கு என்ன என்பதை காண்பதற்க்கும், தொடர்ந்து சக்தியுடன் ஏறுமா, இல்லை இறக்கம் இருக்குமா, என்பதை கண்டு வர்த்தகம் செய்து நிறைவாக இருப்பதற்கும் நாம் இது வரை பார்த்து வந்த விஷயங்கள் போதுமானதாக இருக்கும்,

இருந்தாலும் உங்களுக்கு பயிற்சி ஏற்பட ஏற்பட மேலும் புதிய விசயங்களை நீங்கள் தேட ஆரம்பிப்பீர்கள், அப்பொழுது உங்களின் தேடல் அநேக பலன்களை தரும், நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கின்றோம், மேசையை விட்டு நகராமலே உலகில் இருக்கும் அனைத்து விசயங்களையும் வலை தளங்களின் மூலம் எடுத்து விடலாம்,

சரி நாம் பயின்ற மேற்கண்ட அனைத்து பாகங்களில் இருந்தும் முக்கியமான விசயங்களை எப்படி எல்லாம்  பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்பதினையும், அனைத்து விசயங்களையும் தொகுப்பாக ஒரு பங்கினை தேர்ந்தெடுக்க எப்படி பயன்படுத்த வேண்டும்  என்பதினையும் பார்ப்போம், அப்பொழுது தான் இந்த செயல் முழுமை பெரும்,

பொதுவாக ஒரு பங்கினை பற்றி …

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 29

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 29



            கடந்த வாரம் ROUNDING BOTTOM என்பது எவ்வாறு நடை பெரும் என்பதினை பற்றி பார்த்தோம், இந்த ROUNDING BOTTOM என்ற நிகழ்வுகளில் நாம் தேர்வு செய்யும் பங்குகளின் நிலைகளை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவது நன்றாக இருக்கும், அதாவது இந்த ROUNDING BOTTOM BUYING என்பது ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு  பிறகு ஒரு புதிதாக  பிறந்தது மறுபடியும் வளர்ந்து பெரிய ஆளாக வேண்டிய நிலையில் இருக்கும் பங்குகளை வாங்குவது ஆகும்,

அதாவது ஒரு மிகப்பெரிய வீரர் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டு தனது பலத்தை முழுவதும் இழப்பதற்கு சமம் ஆகும், மிக பலமான சிகிச்சைக்கு பின்பு அவர் முன்பு போல தனது பலத்தை அடைவாரா! மேலும் முன்னர் அவர் போர்க்களத்தில் செய்த சாகசங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதிய சாகசங்களை செய்வாரா என்று தெரிந்த பின்பு தான் அவரை மறுபடியும் போற்படையில் சேர்ப்பார்கள் இல்லையா அது போல தான்,

2000 ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்து கொண்டிருந்த ஒரு பங்கு 200 ருபாய் அளவிற்கு CORRECTION வந்த பொழுது இரக்கத்தை சந்தித்தது என்றால்!  அந்த பங்கு மறுபடியும் முன்னர் விலைக்கு செல்லுமா? மேலும் அந்த விலைகள…

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 28

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 28


           கடந்த பதிவில் FLAG, PENNANT, W ஆகியPATTERN களை பற்றி பார்த்தோம், இப்பொழுதுROUNDING BOTTOM என்ற விஷயத்தை பற்றி பார்ப்போம், பொதுவாக இது போன்ற விஷயங்கள் குறைந்தது 3 மாதம் முதல் 1வருடம் அல்லது அதற்க்கு மேல் கால அளவுகளை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்பவர்கள்  கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம்,

இது போன்ற விசயங்களை  வைத்து நீண்ட கால அடிப்படையில் சில நல்ல பங்குகளை TECHNICAL ஆக நாம் கண்டு கொள்ளலாம், பொதுவாக இந்த விஷயம் நல்லதொரு இறக்கம் சந்தையில் ஏற்பட்ட பின்பு உருவாகும் ஒரு வடிவமாகும், இந்த வடிவத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் சந்தையில் CORRECTION எந்த மாதிரி வருகிறது, இவ்வாறு இறக்கம் ஏற்படும் போது எப்படியான வடிவங்களில்  ஏற்படுகிறது என்பதினை தெரிந்து கொள்வது சற்று பயனுள்ளதாக இருக்கும்,

ஏனெனில் சந்தையில் எப்பொழுதெல்லாம் CORRECTION வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு சில வடிவங்களின் கூட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டே நடந்து  வந்து கொண்டு இருக்கிறது, இது போன்ற செயல் TECHNICAL ANALYSIS இன் தந்தை என போற்றப்படும்  திரு CHARLES DOW  அவர்களின் விதிமுறையான "…

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 27

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 27


           கடந்த வாரம் CHANNEL என்ற வடிவத்தின் ஆதி அந்தம் பார்த்தோம், இப்பொழுது மீதம் உள்ள சில விசயங்களை பற்றி பார்ப்போம், அதன் அடிப்படையில் FLAG PATTERN, PENNANT PATTERN , W PATTERN போன்றவைகளை  பற்றி  பார்ப்போம்,,,

FLAG PATTERN
பொதுவாக இந்த வடிவம் அடிக்கடி தொடர் உயர்வுகளுக்கு இடையே ஏற்படும், இது போன்ற அமைப்புகள் பார்ப்பதற்கு கம்பத்துடன் கூடிய கொடிகளை ஞாபக படுத்துவதால் இதற்க்கு இந்த பெயர் வைத்தார்கள், அதாவது நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் (HEAD&SHOULDER, CUP, TRIANGLE, CHANNEL)  BREAK OUT  என்ற நிலையை பெற்று ஒரு பங்கு உயரும் போது ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைந்த பிறகு சற்று இளைப்பாறல் அடைவதற்காகவோ  அல்லது கொஞ்சம் PROFIT BOOKING செய்வதர்க்காவோ சற்று தயங்கி பிறகு தனது இலக்குகளை நோக்கி நகர முற்படும்,
இது போன்று தயங்கி நிற்கும் செயல் சில நாட்களுக்கு நடைபெறும், இது போன்று நடைபெறும் செயல்கள் ஏதோ  வாச்சான் போச்சான் கதையாக இல்லாமல் அதற்க்கென்று சில விதிமுறைகளை வைத்து செயல்படுவார்கள், இவ்வாறு செயல்படும் போது குறிப்பட்ட நாட்களுக்கு பிறகு அந்த இளைப்பாறல் நடந்த…

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 26

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 26


           கடந்த வாரம் Triangle Pattern பற்றி பார்த்தோம், இப்பொழுது அடுத்த வடிவமான Channel என்ற அமைப்பினை பற்றி பார்ப்போம், Channel என்பது Train  தண்டவாளத்தை போன்று இரு பக்கங்களிலும் சரியான அளவுகளில் இருப்பது, இந்த  channel என்ற அமைப்பின் இடைப்பட்ட  பகுதிகளில் பங்குகளின் நகர்வுகள் இருக்கும்,

இவ்வாறு நகர்ந்து வரும் போது சேனல் அமைப்பின் Tops எனப்படும் உயரங்களில் தடைகளை சந்தித்து கீழே வந்து, மறுபடியும் சேனல் அமைப்பின் bottom எனப்படும் support பகுதிகளில் தங்கி மறுபடியும் உயர ஆரம்பிக்கும் இவ்வாறு சேனல் அமைப்பின் top பகுதிகளில் தடை எடுத்து கீழே வந்து bottom பகுதிகளில் support எடுத்து மறுபடியும் உயரும் இந்த இடப்பட்ட பகுதிகள் சரியான நேர்கோட்டில் இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த வடிவத்தை நாம் பார்க்கும் போது தண்டவாளத்தின்  ஒழுங்கு நன்றாக தெரியும்,

இந்த இடைப்பட்ட பகுதிகளில் எத்தினை முறை வேண்டுமானாலும் நகர்ந்து செல்லலாம், ஆனால் என்று இந்த சேனல் அமைப்பு break out என்ற முறையில் உடைபடுகிறதோ அங்கிருந்து நகர ஆரம்பிக்கும், இவ்வாறு நகர வேண்டிய இலக்குகள் கீழ் நோக்கியதாக …

பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25

பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25

                 கடந்த வாரம் Head & Shoulder பற்றி பார்த்தோம், இந்த வாரம் அடுத்த வடிவங்களை பற்றி பார்ப்போம், அந்த வகையில் இந்த வாரம் Triangle  Patternபற்றி பார்ப்போம்
TRIANGLE PATTERN
Chart படங்களில் முக்கோணம் போன்ற அமைப்புகள் உருவாகும் பொழுது ஏற்படும் விளைவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம், பொதுவாக இது போன்ற அமைப்புகள் chart படங்களில்  எந்த விதமான இடங்களிலும் ஏற்படலாம், அதாவது பங்குகளின் நகர்வுகளுக்கு முந்தய நிலையில் இருக்கும் வடிவங்களை Real Pattern என்றும், நகர்வுகளின் இடையே ஏற்படும் வடிவங்களை Consolidation Pattern என்றும் இரு வகைபடுத்தலாம்,

அந்த வகையில் இந்த Triangle என்ற வடிவம் மேற்கண்ட இரு இடங்களிலும் ஏற்படலாம், எந்த இடங்களில் ஏற்பட்டாலும் இந்த வடிவத்துக்கு அதிக பலம் என்பது மட்டும் நிச்சயம், உதாரணமாக நமது ஜாதக கட்டங்களில் நல்ல இடத்துக்கு உரிய  கிரகங்கள் கேந்திர கோணங்களில் உச்சமாகும் போது ஏற்படும் பலம் இந்த அமைப்பிற்கு எப்பொழுதும் உண்டு,

மேலும் இந்த வடிவம் நமது chart படங்களில் எவளவு சிறியதாக இருந்தாலும் அதற்குரிய பலனை விரைவாக தரும் என்பது எனது …

பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24

பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24


             கடந்த  வாரம் Head Shoulder  பற்றி ஆரம்பித்து இருந்தோம் இல்லையா, இந்த வாரம் இதனை பற்றி சற்று முழுமையாக பார்ப்போம்,  கடந்த வாரத்தில்  இந்த Head Shoulder  இல் இரண்டு வகைகள் உண்டு என்றும்,  அவைகள் முறையே Normal HnS,  மற்றும்  Inverted HnS  என்றும் பார்த்தோம்,
மேலும்  இதன் உள்ளே மேலும் சில  உருவங்கள் உண்டு என்றும்  பார்த்தோம் இல்லையா அவைகளை பற்றி இப்பொழுது பார்ப்போம், அதற்க்கு முன் இது போன்ற வடிவங்கள் ஏற்படும் பொழுது எப்படி இந்த அமைப்பின் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பார்த்தோம், இப்பொழுது இந்த அமைப்பின் உள்ளே உள்ள மேலும் சில உள்  அமைப்புகளை பற்றி பார்ப்போம்  
HEAD & SHOULDER இல் உள்ள வகைகள்
இந்த  அமைப்பில் மூன்று விதமான வடிவங்கள் ஏற்படும் வாய்ப்புகள்  உள்ளது அவைகள் முறையே  Normal HnS, Raising HnS, Sloping HnS,
NORMAL  HNS
பொதுவாக  normal HnS என்ற வடிவம்  ஒரு குறிப்பிட்ட பங்கில் ஏற்பட்டால்  அந்த  குறிப்பிட்ட பங்கு  தொடர்ந்து இறங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட போகிறது என்பதினை   நமக்கு உணர்த்தும்,  இதன் தொடர்ச்சியாக அந்த வடிவத்தின் Ne…

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 23

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 23


            கடந்த வாரம் Fibonacci அளவுகளை எப்படி பயன்படுத்துவது என்றும், மீதமுள்ள semi cup, semi cup with handle என்ற வடிவங்களை பற்றி பார்த்தோம், தற்பொழுது inverted cup, inverted cup with handle, inverted semi cup , inverted semi cup with handle என்ற வடிவங்களை பற்றி பார்ப்போம்,
இதற்க்கு முன் ஒரு விஷயம் அதாவது கடந்த பதிவுகளில் நாம்  cup, cup with handle, semi cup, semi cup with handle போன்ற வடிவங்களை பற்றி பார்த்தோம் இல்லையா, அதையே தான் இபொழுது பார்க்கப்போகிறோம் ஆனால் இங்கு inverted என்ற வார்த்தை சேர்ந்து இருப்பதால் இந்த வடிவங்கள் எல்லாம்  தலை   கீழாக   அமையும்   பட்சத்தில்   ஏற்படும் விளைவுகளை பார்க்கப் போகிறோம்,  

வேறு ஒன்றும் இல்லை இந்த வடிவங்கள் சந்தையில் ஏற்படப்போகும் இறங்கு முகங்களை சுட்டி காட்டுகிறது, எப்படி முன்னர் பார்த்த வடிவங்கள் எல்லாம் break out பெற்றவுடன் தொடர்ந்து உயர்வதற்கு உதவி செய்ததோ, அதே போல் இந்த வடிவங்கள் எல்லாம் break out பெற்றவுடன் தொடர்ந்து இறங்குவதற்கு உதவி செய்யும், மேலும் இதற்க்கான  இலக்குகள் எல்லாம் முன்னர் எப்படி கணக்கிட்ட…

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 22

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 22


               கடந்த பதிவில் SEMI CUP FORMATION பற்றியும், FIBONACCI அளவுகள் பற்றியும் பார்த்தோம், இப்பொழுது இந்த FIBONACCI அளவுகளை எப்படி பங்கு சந்தையில் பயன்படுத்துவது என்று பார்ப்போம், பொதுவில் இது போன்ற விசயங்களை நேருக்கு நேராகத்தான் சொல்ல வேண்டும், அப்பொழுது தான் தெளிவாக புரியும், இல்லையேல் குழப்பங்கள், உடனே ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாமை போன்ற தடங்கல்கள் ஏற்படலாம், இருந்தாலும் முடிந்த வரை எளிமையாக விவரிக்க முயற்ச்சிக்கின்றேன்,
இந்த FIBONACCI அளவுகளை எப்பொழுது பங்கு சந்தையில் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம், அதாவது ஒரு வடிவம் தொடர்ந்து உயர்வதற்க்காகவோ  அல்லது தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்காகவோ BREAK OUT பெற்றுள்ளது என்று நிலை வரும் பொழுது, அந்த வடிவத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை இலக்காக பெற்று இருக்கும்,
அதே நேரம் BREAK OUT பெற்ற உடனே நேராக அந்த புள்ளியை சென்று அடையாது! நாம் முன்னர் பார்த்த HIGHER TOP, HIGHER BOTTOM, அல்லது LOWER TOP LOWER BOTTOM என்ற முறையில் தான் நகரும், அதே நேரம் ஒரே வீச்சில் (IN A SINGLE SWING) …

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 21

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 21


                கடந்த வாரம் cup with handle என்ற pattern பற்றி பார்த்து வந்தோம், இதில் முதல் இலக்காக handle இன் உயரம் இருக்கும் என்றும், அடுத்து cup இன் உயரத்தை இலக்காக வைத்து நகர தொடங்கும் என்றும், அவ்வாறு நகரும் போது higher top, higher bottom என்ற முறையில் ஏறி இறங்கி, ஏறி இறங்கியே நகரும் என்றும் பார்த்தோம்,
மேலும் இந்த cup in உயரத்தை  இலக்காக  வைத்து நகரும் போது முதலில் அந்த cup இன் மொத்த உயரத்தில்  சில சதவிகிதங்களை உயரத்தில் சென்று அடையும் போது, நல்ல இளைப்பாறல் அல்லது profit booking என்ற நிலைமை வரும், இந்த சதவிகிதங்கள் எதன் அடிப்படையில் வருகிறது என்றும், அந்த சதவிகிதங்கள் என்ன என்ன என்றும் இப்பொழுது பார்ப்போம்,
அதாவது technical analysis இல் Fibonacci Retracement   என்ற ஒரு அளவுகோள்  உள்ளது, இந்த அளவுகோள் ஆனது முழுவது சதவிகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுவது ஆகும், மேலும் இந்த Fibonacci முறைகளில் retracement என்ற முறை மட்டும் இல்லாமல் இன்னும் சில விசயங்களும் உள்ளது, அதாவது   Fibonacci Time Zone, Fibonacci arc, Fibonacci fan என்று அநேக விசயங்களை நா…

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் - 20

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் - 20




கடந்த வாரம்  CUP PATTERN  பற்றி   பார்த்து வந்தோம்,  அதன் தொடர்ச்சியாக CUP PATTERN இல் உள்ள மற்ற விஷயங்கள் பற்றியும் பார்த்து விடுவோம்,  முழுமையான CUP FORMATION எப்படி உருவாகிறது, அதன் முழுமையின் பிறகு ஏற்படும் விளைவுகள் என்ன என்ன என்று பார்த்தோம்  இல்லையா, அடுத்து CUP WITH HANDLE PATTERN  பற்றி  பார்ப்போம்,
இது   ஒன்றும்   இல்லை CHINA CLY TEA CUP  பார்த்து இருப்பீர்கள் இல்லையா அதே போன்றதொரு அமைப்பை தான் நாம்  CHART  படங்களில் பார்ப்போம், அதனால் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது,   இதில் ஒரு விஷயம் மேலோட்டமாக தான் இருக்கும் ஆனால் சற்று ஆழமாக  யோசித்து பாருங்கள் எதார்த்தமான விஷயங்கள்  புலப்படும்,
(படங்களின் மீத அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்)
அதாவது  வெறும் TEA CUP இல் சூடான TEA  குடிக்கும் போது ஏற்படும் சங்கடங்களும், HANDLE உள்ள TEA CUP  இல் சூடான TEA  குடிக்கும் போது உள்ள சௌகரியங்களும் நாம் அறிந்ததே,  அந்த எதார்த்தமான விஷயத்தை இந்த  CHART  படங்களில் ஏற்படும் வடிவங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள்,  அதாவது  HANDLE  இல்லாத  CUP  இல்  TEA  குடிக்க சற்று நேர…

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 19

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 19



                    நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! கால தாமதம் ஆனது வருத்தத்தை  தந்தாலும் அநேக நண்பர்களின் தொடர் ஆதரவு மீண்டும் சீக்கிரமே தொடரை தொடரும் என்னத்தை  தந்ததால்  இன்னும் சில நாட்கள் கழித்து தொடர வேண்டிய சூழ்நிலையிலும்! உங்களுக்காக இப்பொழுதே தொடர்கிறேன்.
முதலில் புத்தாண்டு வாழ்த்துகளை சற்றே தாமதமாக சொல்ல வேண்டிய நிலை! இருந்தாலும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கடந்த பதிவில்  சில படங்களை உங்களுக்கு தந்து இருந்தேன், அதைப்பற்றி பெரிதாக யாரும் எந்த கருத்தையும் சொல்ல வில்லை, ஒரு வேளை அனைவருக்கும் சரியாக புரிந்து இருக்கும் போல என்ற எண்ணத்தில் மேலே தொடர்கிறேன்.  பொதுவில் பங்குகளின் வரை படங்கள் ஒவ்வொரு candle களாக அமைய தொடங்கி! அவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமக்கு  காசா முசா வென காட்சி அளிக்கும்.

இந்த காசா முசா வடிவங்களை வைத்து தான் நாம் ஒரு நிதர்சனமான, உண்மையான சில விசயங்களை  கண்டு பிடித்து! அதிலிருந்து ஒரு தெளிவான  புள்ளிகளை கண்டு பிடித்து நமது வர்த்தகத்தை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.  உண்மையில் ஒரு …

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 18

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 18


               இதுவரை பயில்வோம் பங்குசந்தையில் அநேக விசயங்களை பார்த்து  வந்தோம், முக்கியமாக open, high, low, close என்பதினை பற்றியும் அதில்   இருந்து எப்படி ஒரு candlestick bar உருவாகிறது என்பதினை பற்றியும், பிறகு இவ்வாறு உருவாகும் ஒரு தனிப்பட்ட மற்றும் இரண்டு மூன்று candle களின் வடிவத்தை வைத்து  எப்படி அதன் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம் என்றும் பார்த்து வந்தோம், மேலும் இது   போன்று சந்தையின் அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்க பேருதவியாக இருக்கும் Indicator களை பற்றியும் பார்த்து வந்தோம், தற்பொழுது இவ்வாறு உருவாகும் candle களின் தொகுப்பை பயன்படுத்தி எப்படி  ஒரு பங்கில் வர்த்தகம் செய்யலாம்  என்பதினை பார்ப்போம், அதற்க்கு முன் தினமும் சந்தையில் வர்த்தகத்தில் உருவாகும் இந்த ஒவ்வொரு நாள் candle களின் தொகுப்பை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்,
உதாரணமாக  நாம் Technical Analysis ல் பயன்படுத்தும் இந்த வரைபடங்களில் இருக்கும் candle களின் தொகுப்புகள் ஒன்றாக சேர்ந்து நமக்கு சில உருவங்களை ஞாபகப்படுத்தும், அப்படி  ஞாபகப்படுத்தும் இந…

.