பயில்வோம் பங்குச்சந்தை - 12

பயில்வோம் பங்குச்சந்தை - 12                   

என்ன நண்பர்களே பதில் தயார் செய்து விட்டீர்களா, ஓரளவிற்காவது நீங்க முன்னாள் படித்த விஷயங்கள் ஞாபகத்தில் வருவதற்கு இந்த பயிற்ச்சி உதவி செய்ததா, அப்படியானால் சந்தோசமே, சரி நாம் அடுத்த விசயத்திற்கு வருவோம், நான் சொன்னது போல முக்கியமான சில உருவங்கள் சந்தையில் உருவாகும் போது ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன, மற்றும் அந்த உருவங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்,
மேலும் இந்த உருவங்கள் BOTTOM OUT மற்றும் TOPS OUT என்ற நிலைகளில் நல்ல பலத்துடன் இருக்கும் அதே நேரம் நடுவிலும் இந்த உருவங்களுக்கு சக்தி இருந்தாலும் அதிக சக்திகளை எதிர்பார்க்க முடியாது, விமானி கப்பலை இயக்குவது போல, சரி விசயத்திற்கு வருவோம்..
இது போன்ற முக்கியமான உருவங்கள் சந்தைகளில் அநேகம் உள்ளது அனைத்தையும் பார்ப்பது சற்று TENSION ஐ தான் தரும் ஆகவே இந்த உருவங்களில் மிக முக்கியமான சில வற்றை பற்றி பார்ப்போம்
முக்கியமான சில உருவங்கள் :–
DOJI, HARAMI, HAMMER, ENGULFING, PIERCING LINE, 3 METHOD BEARISH & BULLISH PATTERNS, 3 WHITE SOLDIER, 3 BLACK CROWS, DOCK CLOUD COVER, இது போன்ற விசயங்களை கொஞ்சம் ஆழமாக பார்ப்போம், கண்டிப்பாக உதவியாக இருக்கும்
1. DOJI:-
முதலில் DOJI என்ற பெயருடன் ஒரு குறிப்பிட்ட பங்கின் ஒற்றை CANDLE லில் ஏற்ப்படும் வடிவத்தை பற்றி பார்ப்போம், இந்த DOJI என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒரு பங்கில் ஏற்ப்படும் வடிவமாகும், ஒரு CANDLE எப்படி இருந்தால் DOJI என்று நாம் அறியலாம் என்பதை சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்,
அதாவது ஒரு பங்கின் அன்றைய தின OPEN PRICE மற்றும் CLOSE PRICE இரண்டிற்குமான இடைவெளி மிக மிக குறைவாக இருக்கும் சூழ்நிலையில் உருவாகும் CANDLE  DOJI எனப்படும், அதாவது அந்த பங்கு OPEN ஆனா விலையில் இருந்து உயரே எவளவு சென்றாலும், அல்லது கீழே எவளவு வீழ்ச்சி அடைந்தாலும் அல்லது மேலும் கீழும் மாறி மாறி ஏறி இறங்கினாலும் இறுதியாக தான் வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியிலோ அல்லது அந்த புள்ளிக்கு மிக மிக அருகில் சற்று மேலேயோ அல்லது கீழேயோ முடிவடைந்தால் அன்றைய தின அந்த பங்கின் CANDLE ஒரு கூட்டல் குறி போல் இருக்கும் அதற்க்கு பெயர்தான் DOJI எனப்படும்,
இந்த DOJI யில் இரண்டு வகை உண்டு, இரண்டு வெவ்வேறு இடங்களில் இது தோன்றும் போது இதற்க்கு இரண்டு வெவேறு பெயர்களும் உண்டு அவற்றை பற்றியும் பார்ப்போம், அதற்க்கு முன் DOJI யின் படங்களை பாருங்கள்
PICTURE 1:-


DOJI யின் வகைகள் :-
MORNING STAR DOJI
EVENING STAR DOJI
LONG UPPER LEG DOJI
LONG LOWER LEG DOJI
MORNING STAR DOJI :-
 
ஒரு பங்கின் முக்கியமான தாங்கு நிலைகளிலோ (SUPPORT ZONE) அல்லது ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சியை ஒரு பங்கு அடைந்த பிறகோ ஏற்ப்படும் ஒரு DOJI அமைப்பிற்கு MORNING STAR DOJI என்று பெயர், இவ்வாறு ஒரு பங்கில் குறிப்பிட்ட வீழ்ச்சிக்கு பிறகு ஏற்ப்படும் இந்த DOJI அமைப்பு நமக்கு சில கருத்துகளை சொல்லும், அதன் அடிப்படையில் இந்த பங்கு இனி மேற்கொண்டு கீழ் இறங்குவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், இனி தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்,
இதன் அடிப்படையில் இந்த பங்கில் இனி தொடர்ந்து SHORT SELL செய்வது ஆபத்தை உருவாக்கும் என்றும், இனி இந்த பங்கில் BUYING செய்வதே சிறந்தது என்று எடுத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம், MORNING STAR DOJI இன் படத்தை பாருங்கள்
PICTURE 2 :-
EVENING STAR DOJI :-
 
ஒரு பங்கின் முக்கியமான தடை நிலைகளிலோ (RESISTANCE ZONE) அல்லது ஒரு குறிப்பிட்ட உயர்வை ஒரு பங்கு அடைந்த பிறகோ ஏற்ப்படும் ஒரு DOJI அமைப்பிற்கு EVENING STAR DOJI என்று பெயர், இவ்வாறு ஒரு பங்கில் குறிப்பிட்ட உயர்விற்கு பிறகு ஏற்ப்படும் இந்த DOJI அமைப்பு நமக்கு சில கருத்துகளை சொல்லும், அதன் அடிப்படையில் இந்த பங்கு இனி மேற்கொண்டு உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் இனி தொடர்ந்து கீழ் இறங்கும் வாய்ப்புகளும் அல்லது அடுத்த கட்ட நகர்விற்கான CONSOLIDATION PHASE க்குள் நுழையும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்,
இதன் அடிப்படையில் இந்த பங்கில் இனி தொடர்ந்து BUYING செய்வது ஆபத்தை உருவாக்கும் என்றும், இனி இந்த பங்கில் இருந்து வெளியேறுவதே சிறந்தது என்று எடுத்துக்கொண்டு நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம், பொதுவாக இந்த இரண்டு வடிவங்களும் ஒரு பங்கில் அல்லது சந்தையில் TREND REVERSAL ஆக போவதை முன்கூட்டியே நமக்கு சொல்லும் வடிவமாக எடுத்துக்கொண்டு கவனமாக இருக்கலாம், EVENING STAR DOJI இன் படத்தை பாருங்கள்
PICTURE 3:-
LONG UPPER LEG DOJI :-
 
இந்த வடிவமானது பொதுவாக EVENING STAR DOJI யில் ஏற்ப்படும் வாய்ப்புகள் உண்டு, அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் தனது வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியில் இருந்து மிக அதிகமாக உயர்ந்து, உயர் நிலைகளில் தாக்கு பிடிக்க முடியாமல் கீழே வீழ்ச்சி அடைந்து OPEN விலைக்கு சற்று மேலேயோ அல்லது OPEN விலையிலோ அல்லது OPEN விலைக்கு சற்று கீழேயோ முடிவடைவது (CLOSE ஆவது) LONG UPPER LEG DOJI என்று பெயர், இது போன்ற அமைப்பு வரும் சூழ்நிலையில் இந்த பங்கில் வீழ்ச்சிகள் வரப்போகிறது, ஆகவே சற்று கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்
LONG UPPER LEG DOJI என்பது நீண்ட வாழ் போன்ற கோட்டினை உயரத்தில் பெற்று இருப்பது, மேலும் ஒரு பங்கு தொடர்ந்து கீழ் இறக்கத்தில் இருக்கும் போது TECHNICAL ஆக இடையே சில உயர்வுகளை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகலாம் அப்படி இடையே ஏற்ப்படும் உயர்வுகளில் திடீர் என்று இது போன்ற LONG UPPER LEG DOJI என்ற வடிவத்தை பெறுமானால் இன்னும் அந்த பங்கில் கீழ் இறக்கம் (DOWN SIDE) இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் இந்த பங்கில் BUYING கவனம் செலுத்தினாலும் மிக மிக குறைவான லாபங்களுடன் வெளியேறிவிட வேண்டும் அல்லது அந்த பங்கில் BUYING நிலைகளை எடுக்காமல் இருப்பது சிறந்தது, LONG UPPER LEG DOJI இன் படத்தை பாருங்கள்
PICTURE 4:-
LONG LOWER LEG DOJI:-
 
இந்த வடிவமானது பொதுவாக MORNING STAR DOJI யில் ஏற்ப்படும் வாய்ப்புகள் உண்டு, அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் தான் வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியில் இருந்து மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்து , கீழ் நிலைகளில் தொடர்ந்து இறக்கம் காட்டாமல் தொடர்ந்து உயர்ந்து OPEN விலைக்கு சற்று மேலேயோ அல்லது OPEN விலையிலோ அல்லது OPEN விலைக்கு சற்று கீழேயோ முடிவடைவது (CLOSE ஆவது) LONG LOWER LEG DOJI என்று பெயர், இது போன்ற அமைப்பு வரும் சூழ்நிலையில் இந்த பங்கில் உயர்வுகள் வரப்போகிறது, ஆகவே SHORT SELLING இல் இருப்பவர்கள் சற்று கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இந்த பங்கில் BUYING இல் கவனம் செலுத்தலாம் என்று நமக்கு சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்
LONG LOWER LEG DOJI என்பது நீண்ட வாழ் போன்ற கோட்டினை கீழே பெற்று இருப்பது, மேலும் ஒரு பங்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கும் போது TECHNICAL ஆக இடையே சில வீழ்ச்சிகளை (CONSOLIDATION க்காக) சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கலாம், அது போன்று இடையே ஏற்ப்படும் வீழ்ச்சிகளில் திடீர் என்று இது போன்ற LONG LOWER LEG DOJI என்ற வடிவத்தை பெறுமானால் இன்னும் அந்த பங்கில் உயர்வுகள் (UP SIDE) இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம்,
அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் இந்த பங்கில் நாம் தொடர்ந்து BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே நேரம் அதிகமாக உயர்ந்து விட்டது என்று உங்கள் நிலைகளில் இருந்து வெளியேறாமலும், முக்கியமாக SHORT SELL பண்ணாமலும் இருப்பது நல்லது LONG LOWER LEG DOJI இன் படத்தை பாருங்கள்
PICTURE 5:-
இந்த வகையில் மேலும் இரண்டு விசயங்களை நான் சொல்லியாக வேண்டும் அதாவது MORNING STAR CANDLE, மற்றும் EVENING STAR CANDLE, அதாவது இதில் DOJI என்ற வார்த்தை மாட்டும் தான் விடுபட்டுள்ளது மற்றபடி இதுவும் MORNING STAR DOJI மற்றும் EVENING STAR DOJI யின் விளைவுகளையே ஏற்ப்படுத்தும் அதாவது MORNING STAR DOJI என்பது குறிப்பிட்ட இறக்கத்திற்கு பிறகு வரும் அப்படி வந்தால் இறக்கம் தடைபட்டு உயருவதற்கு வாய்ப்புகள் ஏற்ப்படும் என்று பார்த்தோம் இல்லையா அதே விளைவுகளை தான் இந்த MORNING STAR CANDLE ம் தரும்,
ஆனால் DOJI என்பது OPEN மற்றும் CLOSE புள்ளிகளுக்கு இடையேயான இடைவெளி மிக மிக குறைவாகவோ அல்லது இடைவெளி இல்லாமலோ இருக்கும், ஆனால் இந்த MORNING STAR CANDLE லில் இடைவெளிகள் சற்று கொஞ்சம் இருக்கலாம் அதே நேரம் மற்ற அமைப்புகள் DOJI ஐ போலவே இருக்க வேண்டும் இந்த படத்தையும் பாருங்கள், இதே போல் தான் EVENING STAR CANDEL உம், EVENING STAR CANDLE உயரங்களிலும் MORNING STAR CANDLE இறக்கங்களிலும் வரும் சரி இந்த படத்தையும் பாருங்கள்
PICTURE 6:-


என்ன நண்பர்களே DOJI என்ற வடிவத்தின் முக்கியத்துவம் புரிந்ததா, அடுத்து நாம் மற்ற

இந்தத் தொடருக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அனைவர்க்கும் நன்றிகள், மற்றும் தீபாவளி வாழ்த்துக்களைக் கட்டுரையாளருடன் இணைந்து தெரிவித்துக் கொள்கின்றோம். - 4Tamilmedia Team
 HAMMER
HAMMER என்பது சுத்தியல் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும், அதே போல் CHART படங்களில் ஏற்ப்படும் உருவங்கள் இருப்பதினால் அதற்க்கு இந்த பெயர் வைத்துள்ளனர், HAMMER இல் இருண்டு வகை உள்ளத்து, ஒன்று NORMAL HAMMER, மற்றொன்று INVERTED HAMMER, சரி HAMMER ஐ பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,,
NORMAL HAMMER
இந்த வகையான HAMMER ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சிக்கு பிறகு வருவது, இதன் அர்த்தமாக விரைவில் TREND REVERSAL வரப்போகிறது என்று கொள்ளலாம், அதாவது ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சிக்கு பிறகு, ஒரு நாள் தொடங்கிய புள்ளியில் இருந்து நல்ல வீழ்ச்சியை சந்தித்து, திடீர் என்று உயர ஆரம்பித்து, தொடங்கிய புள்ளிக்கு சற்று மேலேயோ, அல்லது கீழேயோ ஒரு சுத்தியல் போன்ற உருவத்துடன் முடிவடைவது, இவ்வாறு ஏற்படின் வீழ்ச்சிகளை முறியடித்து உயர்வதாக கொள்ளலாம்,
மேலும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் ஏற்படும், இவ்வாறு ஏற்படும் HAMMER தொடங்கிய புள்ளிக்கு மேலே தான் முடிவடைய வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது, கீழேயும் கூட முடிவடையலாம், அதாவது SOLID RED CANDLE என்ற வகையில், அதே நேரம் EMPTY GREEN என்ற வகையில் முடிவடைந்தால், (தொடங்கிய புள்ளிக்கும் மேலே முடிவடைதல்) சற்று பலம் அதிகம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், சரி படத்தை பாருங்கள் (படங்களைப் பெரிதாக் பார்க்க படத்தின் மேல் அழுத்தவும்.)
NORMAL HAMMER PICTURE -1

INVERTED HAMMER
INVERTED HAMMER என்பது சந்தையின் நல்ல உயரங்களுக்கு பிறகு வருவது, அதாவது நாம் முன்னர் பார்த்த HAMMER என்ற உருவத்திற்கு தலை கீழ் வடிவத்துக்கு தான் இந்த பெயர், அதாவது சந்தையில் NORMAL OPEN என்ற முறையில் தொடங்கி, மேலே தாக்கு பிடிக்க முடியாமல் கீழே வந்து தொடங்கிய புள்ளிக்கு சற்று மேலேயோ அல்லது கீழேயோ முடிவடைவது, இது போன்று ஏற்படுமாயின், சந்தையில் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் விரைவில் ஏற்படும், ஆகவே நாம் நமது LONG POSITION களில் இருந்து லாபங்களை உறுதி செய்து கொள்ளவது நல்லது, சரி இந்த படத்தையும் பாருங்கள்
INVERTED HAMMER PICTURE – 2

பொதுவில் ஒரு விஷயத்தை HAMMER ஐ பற்றி சொல்லலாம் எந்த வகையான HAMMER உம் சந்தையின் நல்ல உயர்வுக்கு பிறகு உயரங்களில் வந்தாலும் அது ஆபத்து தான், அதே போல் எந்த விதமான HAMMER இம் சந்தையின் நல்ல வீழ்ச்சிக்கு பிறகு LOW பகுதிகளில் வந்தால் அது நல்லதே.

இந்த தலைப்பின் வார்த்தையிலேயே அதன் அர்த்தம் புதைந்து இருப்பதை கவனியுங்கள் அதாவது ENGULFING என்றால் அடித்து நொறுக்கி முன்னேறுவது என்று அர்த்தம், அதே போல் தான் சந்தை இறக்கத்தில் இருக்கும் போது (CORRECTION), இந்த CORRECTION ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பதினை உறுதி செய்து கொள்ளும் ஒரு வழி முறையே! இந்த ENGULFING BULL எனப்படும், சரி இதை விளக்கமாகவே பார்த்து விடுவோம், அதாவது ஒரு பங்கிலோ அல்லது சந்தையிலோ இறக்கங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, TECHNICAL ஆய்வின் படி ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தனது இறக்கத்தை நிறுத்தி உயர்வதற்கு ஆரம்பிக்கும் இல்லையா, அந்த குறிப்பிட்ட புள்ளியை நாம் TECHNICAL ANALYSING துணையுடன் இந்த குறிப்பிட்ட புள்ளியில் இருந்து திரும்பும் வாய்ப்புகள் உள்ளது என்று கணித்து விடலாம்,
அதே நேரம் அந்த குறிப்பிட்ட புள்ளிகள் வந்தவுடன், நாம் நினைத்தது போல இறக்கத்தில் இருந்து சந்தை திரும்புகின்றதா! என்பதினை உறுதி செய்யும் சில வடிவங்களில் இந்த ENGULFING BULL PATTERN மிக முக்கியமானது, இன்னும் சரியாக சொல்லப்போனால் இங்கு நாம் பார்த்து வரும் முக்கியமான வடிவங்கள் அனைத்தும் இது போன்ற முக்கியக்த்துவத்தை பெற்றவைகள் தான், சரி விசயத்திற்கு வருவோம்,
இந்த ENGULFING BULL என்பது சந்தையில் இறக்கம் நடந்து கொண்டிருக்கும் போது, இந்த இறக்கம் ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில், அல்லது இறக்கம் ஒரு முடிவுக்கு வரும் நாளில் உருவாகும் ஒரு CANDLE வடிவமாகும், இந்த ENGULFING BULL வடிவத்தை நாம் கணக்கெடுக்க நமக்கு இரண்டு நாட்களுக்கான CANDLE தேவைப்படும், முன்னர் நாம் பார்த்த DOJI மற்றும் HAMMER க்கு ஒரு நாள் CANDLE ஐ வைத்தே சந்தையின் அடுத்த கட்ட TREND REVERSAL ஐ நாம் கணித்தோம், இல்லையா! அதே போல தான், அதன் அடுத்த கட்டம் இது,
 முதல் CONFORMATION DOJI யின் மூலமும், இரண்டாவது CONFORMATION ENGULFING BULL வடிவத்தின் மூலமும் நாம் சந்தையில் ஏற்ப்படும் TREND REVERSAL ஐ கணிக்க முடியும், சரி இந்த ENGULFING BULL வடிவத்தின் விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம், அதாவது சந்தையில் இறக்கம் நடந்து கொண்டிருக்கும் போது, முதல் நாள் நல்ல வீழ்ச்சி ஏற்ப்பட்ட்டு, (நாம் முன்னர் பார்த்த SOLID RED) அடுத்தநாள் ஒரு நல்ல சக்தி வாய்ந்த உயர்வு ஏற்பட்டு இருக்க வேண்டும், அதாவது முதல் நாள் LOW புள்ளிக்கும் கீழே இந்த LOW இருக்க வேண்டும், பிறகு முதல் நாள் HIGH புள்ளிக்கும் மேலே இன்றைய CLOSE இருக்கவேண்டும்,
 சிலர் முதல் நாள் OPEN புள்ளிக்கு மேல் இன்றைய CLOSE இருந்தாலே போதுமானதாக எடுத்துக் கொள்கிறார்கள், முதல் நாள் HIGH புள்ளிக்கும் மேலே இன்றைய CLOSE இருந்தால், நல்ல சக்திவாய்ந்த ENGULFING BULL என்று எடுத்துக்கொள்ளலாம், மேலும் இந்த வடிவத்துடன் நாம் சில விசயங்களை கவனிக்க வேண்டும், அதாவது இன்றைய தினம் மிக அதிகப்படியான VOLUME இருக்க வேண்டும், தொடர்ந்து மூன்றாவது நாளும் சந்தை உயர்வில் இருக்க வேண்டும், கூட இரண்டாம் நாள் HIGH புள்ளிக்கும் மேலே CLOSE ஆகவேண்டும், இப்படி எல்லாம் இருந்தால் TREND REVERSAL ஆகி விட்டதாக எடுத்துக்கொண்டு, இரண்டாம் நாள் LOW புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு, BUYING இல் கவனம் செலுத்தலாம், சரி ENGULFING BULL படத்தை பாருங்கள்...
 ENGULFING BULL PICTURE – 3இந்த வடிவம் ENGULFING BULLISH க்கு அப்படியே எதிர்பதம், அதாவது சந்தை உயரத்தில் இருக்கும் போது, TREND REVERSAL ஏற்ப்பட்டு கீழ் இறங்கும் செய்தியை நமக்கு உணர்த்தும் ஒரு வடிவம், அதாவது முதல் நாள் நல்ல உயர்வுடன் கூடிய ஒரு CANDLE, அதற்க்கு அடுத்த நாள் ஏற்ப்படும் CANDLE அமைப்பானது, முதல் நாள் ஏற்ப்பட்ட CANDLE இன் HIGH புள்ளியை விட உயர்ந்து, தாக்கு பிடிக்க முடியாமல்! முதல் நாள் LOW புள்ளியையும் கீழே கடந்து முடிவடைவது, இப்படி இருந்தால் TREND REVERSAL ஆகும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்,
மேலும் இதற்க்கு மூன்றாவது நாள் CANDLE அமைப்பும், சந்தை இறங்குவதற்கு சாதகமாக இரண்டாம் நாள் LOW புள்ளியை கடந்து நல்ல சக்தியுடன் முடிவடைய வேண்டும், மேலும் இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களின் VOLUME அதிகமாக இருக்க வேண்டும், இப்படி எல்லாம் ஏற்படுமாயின் சந்தையின் இறக்கம் உறுதி செய்யப்படும் சரி ENGULFING BEARISH படத்தை பாருங்கள்
ENGULFING BEARISH PICTURE – 4PIERCING LINE
இந்த அமைப்பு ஒரு பங்கில் குறிப்பிட்ட வீழ்ச்சிகள் வந்த பின்பு ஏற்படக்கூடிய வடிவம் ஆகும், இந்த வடிவம் TREND REVERSAL விரைவில் வரப்போகிறது என்பதினை சுட்டிக்காட்டும், ஆகவே இந்த வடிவம் CHART படங்களில் ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சிகள் ஏற்பட்ட பின்பு ஏற்படுமாயின், நாம் நமது LONG POSITION களை தைரியமாக எடுக்கலாம், மேலும் தொடர்ந்து நல்ல உயர்வையும்! விரைவில் பெரும், சரி இந்த வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதினை பார்ப்போம்,
குறிப்பிட்ட பங்கில் நல்ல வீழ்ச்சிகள் ஏற்பட்ட பின்பு, இறுதி நாளில் நல்ல வீழ்ச்சியை சந்தித்து இருக்க வேண்டும், அதாவது OPEN புள்ளியை விட அன்றைய CLOSE சற்று தொலைவில் கீழ் நோக்கி முடிந்து இருக்க வேண்டும், (LONG SOLID RED CANDLE), பின்பு அடுத்த நாள் வர்த்தக தினத்தில், நேற்றைய LOW புள்ளியை விட கீழே தொடங்கி, அதற்கும் சற்று கீழே சென்று, மறுபடியும் நல்ல VOLUME உடன் உயர்ந்து, முதல் நாள் ஏற்ப்பட்ட SOLID RED CANDLE இன் பாதிக்கு மேல் இன்றைய CLOSE ஆகி இருக்க வேண்டும், அப்படி ஏற்படுமாயின் இன்றைய LOW புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு, நாம் வாங்கலாம், வரும் தினங்களில் அந்த குறிப்பிட்ட பங்கில் நல்ல உயர்வுகள் ஏற்ப்பட்டு, லாபங்கள் பெருகும், சரி இந்த படத்தை பாருங்கள்

PIERCING LINE PICTURE – 5


இந்தத் தொடரை எழுதி வரும் சரவணபாலாஜி அவர்களின் வலைப்பதிவில் தினசரி பங்குச் சந்தைகளின் நகர்வுகள் குறித்து எழுதி வருகின்றார். அதனைக் காண இங்கே

text=adstext=ads