பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 16

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 16              கடந்த வாரம் முக்கியமான Indicator களாக Moving Average , RSI ஆகிய  இரண்டை  பற்றியும்  பார்த்து வந்தோம், தற்பொழுது  மேலும் சில  முக்கியமான Indicator களை பற்றி பார்ப்போம்,
MACD
MACD என்பது Moving Average Convergence and Divergence என்று அழைக்கப்படும், இந்த Indicator ஐ வைத்து நாம் ஒரு பங்கை எந்த புள்ளியில் வாங்கலாம், எந்த புள்ளியில் விற்கலாம் என்ற முடிவுக்கு வரலாம், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த indicator இல் இரண்டு கோடுகள் மேலும் கீழும் சென்று வரும், இதில் ஒரு கோடு MACD என்று அழைக்கப்படும் மற்றொன்று நாம் முன்னர் பார்த்த EXPONENTIAL MOVING AVERAGE கோடு ஆகும் இந்த EMA கோடானது 9 என்ற நாட்களின் அளவை கொண்ட EMA ஆகும்,
சரி இந்த indicator ஐ எப்படி நாம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன், அதாவது இந்த இரண்டு கோட்டில் MACD என்ற கோடு "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை நாம் வாங்கலாம், அதே போல் இந்த MACD கோடானது "0" என்ற புள்ளியை கீழே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை விற்கலாம், இவ்வாறு நாம் இந்த indicator ஐ பயன்படுத்தி வர்த்தக முடிவுகளை எடுக்கலாம், (வெறும் இந்த indicator ஐ மட்டும் வைத்து 100% சரியான முடிவுக்கு வரமுடியாது, இதனுடன் நமது Technical Analysis அறிவையும் சேர்த்து தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்),
அதே நேரம்  இதில் மற்றொரு EMA 9 என்ற கோடும் உள்ளது என்று பார்த்தோம் இல்லையா, இந்த இரண்டு கோடுகளும் (EMA, MACD) ஒன்றுக்கொன்று cross ஆவதை வைத்தும் நாம் Buying மற்றும் Selling  முடிவுகளையும் எடுக்கலாம், அதாவது இந்த MACD என்ற கோடு EMA 9  என்ற கோட்டை மேலே கடந்தால் அது முதல் Buying Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு  "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அது இரண்டாவது  Buying Signal ஆகும்,
இப்படி  ஏற்பட்டு Technical  ஆக  சில  வடிவங்கள் break out என்ற நிலையை பெற்று நல்ல volume நடக்குமானால்! நன்றாக அந்த பங்கை வாங்கலாம், அதே போல் இந்த MACD என்ற கோடு EMA 9  என்ற கோட்டை கீழே  கடந்தால் அது முதல் Selling  Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு  "0" என்ற புள்ளியை கீழே  கடந்தால் அது இரண்டாவது Selling  Signal ஆகும், இதற்க்கு பின் முன்னர் பார்த்த விஷயங்கள் யாவும் தொடர்ந்து நடந்தால் Selling செய்யலாம், இப்படியாக இந்த indicator நாம் நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம்,
சரி இந்த MACD என்று கோடு எப்படி வந்தது என்றும் பார்த்து விடுவோம்,   அதாவது இரண்டு அளவுள்ள  Moving Average கோடுகள் ஒன்றுடன் ஒன்று Cross ஆகும் போது, ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தும் ஒரு Indicator ஆகும்,   இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் முன்னர் பார்த்த EMA (EXPONENTIAL MOVING AVERAGE) களில் 26  என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும், 12 என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும் எடுத்து,  இதில் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை மேலே கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை மேலே கடக்கும், அதே போல் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை கீழே  கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை கீழே கடக்கும்,
ஆகவே இந்த 12 EMA மற்றும் 26 EMA என்ற இரண்டு கோடுகளும் ஒன்றுக்கொன்று தங்களை Cross செய்வதை வெளிப்படுத்தும் விதமாக இந்த MACD என்ற indicator செயல்படுகிறது, இதில் இந்த 12 EMA, 26 EMA என்ற அளவுகளுக்கு பதில் வேறு சில எண்களை போட்டு! அதன் விளைவுகள் சரியாக இருந்தால்! அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், அது உங்களின் ஆராய்ச்சியையும் அனுபவத்தையும் பொறுத்தது ,,, சரி MACD யின் படத்தை பாருங்கள்  
MACD Picture:

ADX
ADX என்பது Averages Direction Movement Index என்று அழைக்கப்படும், இந்த ADX indicator வெறும் Buying, மற்றும் selling signal மட்டும் தராமல் அந்த குறிப்பிட்ட   Trend இன் சக்தியையும் நமக்கு வெளிப்படுத்துகிறது , சரி இதை பற்றி விளக்கமாக பார்ப்போம், இந்த ADX Indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும், இந்த கோடுகளை வைத்து தான் நாம் நமது buy அல்லது sell முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்,
அதாவது இந்த ADX எனப்படும் மொத்த indicator இல் “ D+ ” மற்றும் “ D - “ என்ற indicator கோடுகளும்,  ADX எனப்படும் மற்றுமொரு  supporting tool கோடும் இருக்கும் , (இதை indicator என்று சொல்வதைவிட Catalyst! அதாவது  வினை  ஊக்கி என்று சொல்வது தான் சரியாக இருக்கும்), இந்த மூன்று கோடுகள் தங்களுக்குள் நகர்ந்து கொள்வதை வைத்து தான்! நாம் நமது buying மற்றும் selling முடிவுகளை எடுக்க வேண்டும், அது எப்படி என்று அடுத்த வாரம்  பார்ப்போம், நண்பர்களே தொடரை படிப்பவர்கள் தங்கள் கருத்துகளை  சொல்லுங்கள்,

text=adstext=ads