பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 17

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 17
             ADX கடந்த வாரம் ADX என்ற indicator ஐ பற்றி பார்த்து  கொண்டிருந்தோம் இல்லையா, இப்பொழுது  முழுமையாக அதைபற்றி  பார்ப்போம், adx என்ற indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும் என்றும் அதில் இரண்டு கோடுகள் முறையே D+, D-, என்றும், மற்றது ADX என்ற வினை ஊக்கி என்றும் பார்த்து கொண்டிருந்தோம் இல்லையா, சரி இப்பொழுது  இந்த மூணு கோடுகளையும் பயன் படுத்தி எப்படி நமது வர்த்தகத்தை சரியாக செய்யலாம் என்று பார்ப்போம், இந்த adx என்ற கோடானது ஒரு குறிப்பிட்ட பங்கில் நடந்து கொண்டிருக்கும் trend ஐ உறுதிபடுத்தும் ஒரு கோடாகும், அதாவது D+ என்ற கோடானது D- என்ற கோட்டை மேலே கடந்து செல்லும் பட்சத்தில் அந்த பங்கை நாம் வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதே நேரம் இந்த D+ கோடானது மேலே தொடர்ந்து உயரும், இதற்க்கு எதிராக D- என்ற கோடு  கீழே வரும், இப்படி நடந்து  கொண்டிருக்கும் போது இந்த D+ என்ற கோட்டை தொடர்ந்து, மேலே சொன்ன ADX என்ற கோடும் உயரே  செல்லும்! இப்படி சென்றால் அந்த buying trend நல்ல  சக்தியுடன்  செல்கிறது  என்று  அர்த்தம்  கொள்ளலாம்,  அதே போல் இந்த D+ என்ற  கோடு  D- என்ற கோட்டை கீழே கடந்து சென்றால் நாம் அந்த பங்கை விற்று வாங்கலாம் என்று அர்த்தமாகும், அதாவது அந்த பங்கு தொடர்ந்து கீழே வர இருக்கிறது என்று அர்த்தம், இப்படி நடக்கும் போது D- என்ற கோடு மேலே உயரும், இதற்க்கு எதிராக D+ என்ற கோடு கீழே வந்து கொண்டிருக்கும், இந்த நேரத்தில் adx என்ற கோடும் d- என்ற கோட்டினை தொடர்ந்து மேலே உயருமானால் அந்த பங்கின் இறங்கும் trend நல்ல சக்தியுடன் இருப்பதாக நாம் கொள்ளலாம்,  இது போல் மேலே குறிப்பிட்ட கோடுகள் ஏறி இறங்குவதற்கு சில புள்ளிகளை அதன் குறியீடாக கொள்ளலாம், அதாவது இந்த adx கோடானது எந்த புள்ளியை மேலே கடந்து சென்றால் நல்ல உயர்வு அல்லது வீழ்ச்சி என்று  சொல்லலாம் என்பதினை பற்றிய விஷயம், அதாவது இந்த adx என்ற கோடானது 20 மற்றும்  40 என்ற இரண்டு புள்ளிகளையும் முக்கியமான அளவுகளாக கொண்டு நகரும் (சிலர் 30 என்ற  புள்ளியை  கடந்தால்  என்றும் சொல்கிறார்கள்),  அதாவது  d+ என்ற கோடு   d- என்ற கோட்டை மேலே கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இதனை தொடர்ந்து இந்த adx என்ற கோடும் கீழே இருந்து உயர்ந்து வந்து 20 என்ற புள்ளியை கடந்து மேலே செல்கிறது என்றால், அந்த trend சக்தி மிக்கதாக கொள்ளலாம், பிறகு adx கோடு 40 என்ற புள்ளியையும் மேலே கடந்து சென்றால் அந்த trend இன் சக்தி இன்னும் அதிகம் என்று கொள்ளலாம், அதற்க்கு அடுத்து 50 என்ற புள்ளிக்கு மேல் அதிகமான சக்தி என்று கொள்ளவேண்டும்,  அதே போல் இந்த adx கோடானது மேலே இருந்து கீழ் நோக்கி இறங்கி வந்து 40 என்ற புள்ளியை கீழே கடந்து வருமானால் சக்தி குறைந்து விட்டது என்று கொள்ள வேண்டும், பிறகு 20 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் சுத்தமாக சக்தி குறையும் வாய்ப்புகள் உருவாகலாம் என்றும், புதிய trend ஏற்பட இருக்கிறது என்றும் கொள்ள வேண்டும், மேலும் இந்த adx என்ற கோடு மேலே இருந்து கீழே வரும் சமயங்களில் நடந்து கொண்டிருக்கும் trend சற்று மந்தமாக, அதிகப்படியான நகர்வுகள் இல்லாமல் இருக்கும், அல்லது consolidation என்ற நிலையில் இருக்கும், சரி இந்த adx இன் படத்தை பாருங்கள்                     ADX PICTURE 1  PARABOLIC SAR PARABOLIC SAR என்பது ஒரு முக்கியமான INDICATOR ஆகும், முக்கியமாக தின வர்த்தகர்களுக்கு பயன்படக்கூடியது, இதை பற்றி சொல்லவேண்டும் என்றால், இந்த PARABOLIC SAR INDICATOR புள்ளியை ஒரு பங்கின் விலை கீழே கடந்தால் விற்கலாம் என்றும், இந்த புள்ளியை மேலே கடந்தால் வாங்கலாம் என்றும், அர்த்தம் கொள்ளும் அளவுக்கு BUYING மற்றும்  SELLING SIGNAL களை தரும் INDICATOR என்று கூட சொல்லலாம்,  அதாவது  இந்த PARABOLIC SAR என்ற INDICATOR, பங்குகளின் CHART படங்களின் ஊடே நகர்ந்து கொண்டிருக்கும் புள்ளிகளாகும், இந்த புள்ளிகள் பங்குகளின் CHART படங்களுக்கு மேலேயும் கீழேயும் அமைந்து வந்து கொண்டே இருக்கும், அதன் படி தற்பொழுது அருகில் இருக்கும் புள்ளியை பங்கின் விலை கீழே கடந்தால் SELL, அதே போல் மேலே உள்ள புள்ளியை பங்கின் விலை மேலே கடந்தால் BUY, இப்படியாக இந்த INDICATOR BUYING மற்றும் SELLING SIGNAL களை தருகிறது அதனால் தான் இந்த INDICATOR க்கு PARABOLIC STOP AND REVERSAL (SAR) என்று பெயர்,  இதன் படி  நாம் அப்படியே செயல்படாமல் வேறு சில விசயங்களையும் கையாண்டால் மிகச்சரியான வர்த்தக முடிவுகளை இந்த INDICATOR ஐ பயன்படுத்தி நாம் எடுக்கலாம், அதாவது இந்த PARABOLIC SAR    புள்ளியை ஒரு பங்கின் விலை ஒரு மணி நேர தின வர்த்தக CHART இல் மேலேயோ அல்லது கீழேயோ கடந்தவுடன், அடுத்து அந்த இடத்தில் இருக்கும் TOPS மற்றும் TREND LINE RESISTANCE, மற்றும் FIBONACCI அளவுகள் மற்றும் PATTERNS போன்ற விசயங்களை எல்லாம் சரி பார்த்து உங்கள் வர்த்தகத்தை தொடங்கினால் கண்டிப்பான லாபம் கிடைக்கும், இந்த INDICATOR தின வர்த்தகத்திற்கு மிக உதவியாக இருக்கும் ,  PARABOLIC SAR    இன் படத்தை பாருங்கள்                     PARABOLIC SAR PICTURE 2 
text=adstext=ads