பயில்வோம் பங்குச்சந்தை பாகம் - 20

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் - 20


           

கடந்த வாரம்  CUP PATTERN  பற்றி   பார்த்து வந்தோம்,  அதன் தொடர்ச்சியாக CUP PATTERN இல் உள்ள மற்ற விஷயங்கள் பற்றியும் பார்த்து விடுவோம்,  முழுமையான CUP FORMATION எப்படி உருவாகிறது, அதன் முழுமையின் பிறகு ஏற்படும் விளைவுகள் என்ன என்ன என்று பார்த்தோம்  இல்லையா, அடுத்து CUP WITH HANDLE PATTERN  பற்றி  பார்ப்போம்,
இது   ஒன்றும்   இல்லை CHINA CLY TEA CUP  பார்த்து இருப்பீர்கள் இல்லையா அதே போன்றதொரு அமைப்பை தான் நாம்  CHART  படங்களில் பார்ப்போம், அதனால் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது,   இதில் ஒரு விஷயம் மேலோட்டமாக தான் இருக்கும் ஆனால் சற்று ஆழமாக  யோசித்து பாருங்கள் எதார்த்தமான விஷயங்கள்  புலப்படும்,
(படங்களின் மீத அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்)
அதாவது  வெறும் TEA CUP இல் சூடான TEA  குடிக்கும் போது ஏற்படும் சங்கடங்களும், HANDLE உள்ள TEA CUP  இல் சூடான TEA  குடிக்கும் போது உள்ள சௌகரியங்களும் நாம் அறிந்ததே,  அந்த எதார்த்தமான விஷயத்தை இந்த  CHART  படங்களில் ஏற்படும் வடிவங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள்,  அதாவது  HANDLE  இல்லாத  CUP  இல்  TEA  குடிக்க சற்று நேரம் எடுக்கும், அதே நேரம்  HANDLE  உள்ள  CUP இல்  TEA   அருந்துவது விரைவாகவும் இருக்கும்,
அதே நேரம் கை சுடாமல்  CUP இல் உள்ள  TEA ஐ சூடு குறைக்க இந்த HANDLE ஐ பயன்படுத்தி ஒரு சுழட்டு சுழட்டலாம், அது மாதிரி தான் இது போன்ற  CUP WITH HANDLE வடிவம் உள்ள அமைப்பு CHART படங்களில் வந்தால் எளிதில் பத்திரமாக பணம் எடுக்கலாம், மேலும் இதில் முதல் இலக்காக  HANDLE இன்  உயரமும், அதன் பிறகு FIBONACCI அளவுகளின் படி  சற்று இளைப்பாறல் பெற்று, பிறகு முழு வடிவமான CUP இன்  உயரத்தை இலக்காக அடைய நகரும்,
மேலும் பங்குசந்தையில் நகர்வுகள் எப்பொழுதும் மேலும் கீழுமான அசைவுகளுடன் இருக்குமே தவிர  ஒரே நேர் கோட்டில் குதிரைக்கு லாடம் கட்டியது போல் இயங்காது, நாம் முன்னரே பார்த்தோம், பங்கு சந்தையின் நகர்வுகள் என்பது MECHANICAL ஆக நடப்பது இல்லை! இது பல கோடி மனித  மூளைகள்  சில விதி முறைகளை கடை பிடித்து வருமானம் செய்ய செயல்படும் ஒரு முக்கியமான  இடம், அதாவது
கிரிக்கெட் மைதானத்தில் பல ஆண்டுகள் கடினமான  பயிற்சி பெற்று பல நுணுக்கங்களை அனுபவத்தில் பெற்று, எந்த இடத்தில் என்ன மாதிரியான பந்துகளை போடவேண்டும் என்ற அனுபவங்களை  பெற்ற மிக திறமைசாலிகளான மெக்ராத், இசாந்த் சர்மா, ஜாகிர் கான், ஷேன் வார்னே போன்ற பந்து வீச்சாளர்கள் விளையாடும் மைதானத்தில், வெறும் தொலை காட்ச்சியில் மட்டும் கிரிக்கெட் பார்த்த சாதாரண ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு  மகனாக  பிறந்த நபர் BATSMAN ஆக இந்த பந்து வீச்சாளர்களுக்கு  மத்தியில்   விளையாட இறங்கினால் என்ன ஆகும்!
அவர் OUT ஆவது ஒரு புறம் இருந்தாலும், இவர்களின் பந்து வீச்சு வேகத்தின், சுழண்டு தாறுமாறாக  செல்லும் நெளிவு சுளிவுகளில், இவரின் உயிருக்கு என்ன உத்தரவாதம், அதுவும் இவர் வீட்டுக்கு ஒரே பிள்ளை இவருக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த குடும்பத்தின் கதி, ஒரு வேலை அவருக்கு திருமணம் ஆகி குழந்தை வேறு இருந்தால், யோசித்து பாருங்கள்,
பந்து போடுபவர்கள் எதிரே இருப்பவர் இந்த விளையாட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர் என்று அறிந்து இருந்தால் சற்று மெதுவாக பந்து போடும் வாய்ப்புகள் கூட உள்ளது, ஆனால் பங்கு சந்தையில்  உள்ள பெரும் கைகளிடம் இந்த இரக்கத்தை எதிர் பார்க்க முடியுமா !?, ஐயோ பாவம் இவர் குறைந்த வருமானம் உள்ளவர், இந்த வருமான வாய்ப்பை விட்டால் இவருக்கு வேறு வழி இல்லை, என்று உங்களுக்காக சந்தையை வளைத்து நெளித்து நகர்த்துவார்களா, யோசித்து பாருங்கள்! நான் வெறும் கதை சொல்வதற்காக இதை சொல்ல வில்லை,
நான் அறிந்து பங்கு சந்தையில் பணம் போட்டு பணம் எடுக்கலாம் என்ற விவரம் மட்டுமே தெரிந்து வியாபாரம் செய்து காணாமல் போனவர்கள் அநேகம், அனைத்து பயிர்ச்சிகளும் பெற்ற சச்சின் டெண்டுல்கர் மெக்ராத் பந்தில் RUN எடுப்பதை விட தனது விக்கட்டை பாதுகாப்பதற்கு தடுமாறும் தடுமாற்றம் நீங்கள் விளையாட்டுகளில் பார்த்து இருப்பீர்கள்,
இப்படி இருக்கும் போது ஆயிரம் மெக்ராத்துகள் உள்ள நமது பங்கு சந்தையில் குறைந்தது, இன்ன மாதிரியான விதி முறைகளோடு தான் சந்தை நகர்கிறது என்பதினையாவது தெரிந்து வர்த்தகம் செய்வது நல்லது, ஒன்றுமே தெரியாமல் அநேக நண்பர்கள் பங்கு சந்தையில் விளையாட வருகிறார்கள்!
அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது எல்லாம் முதலில்  FUNDAMENTAL மற்றும் TECHNICAL ANALYSIS பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், பிறகு இங்கு வாருங்கள் என்பதே, ஒரு வேலை உங்கள் நண்பர்கள் யாரும் இப்படி இருந்தால் அவர்களுக்கு இந்த பதிவை படிக்க சொல்லுங்கள்,
ஆகவே கண்டிப்பாக பங்கு சந்தையில் பங்கு பெரும் அனைவரும் FUNDAMENTAL  ANALYSIS மற்றும் TECHNICAL ANALYSIS  பற்றிய  அனுபவங்களை பெற்று கொள்ளுங்கள், சில நேரங்களில் மேற்கண்ட விஷயங்கள் இல்லாமல்   வெற்றிகள் வேண்டுமானால் சாத்தியமாகலாம், எல்லா நேரங்களிலும் இது சாத்தியமில்லை,
மேலும் தின வர்த்தகர்கள் மற்றும் குறுகிய தின முதலீட்டாளர்கள் மிக மிக அவசியமாக இந்த விசயங்களை பயின்று கொள்வது முக்கியம், ஆகவே இந்த விஷயங்கள் அறிந்திராத உங்கள் நண்பர்களுக்கு இதனை எடுத்து  சொல்லுங்கள், சரி விசயத்திற்கு வருவோம்
HANDLE இன் இலக்குகள் நிறைவு பெற்றவுடன் அடுத்து CUP இன் உயரத்தை அடைய மேலும் கீழும் ஏற்ற இறக்கங்கள் உடனே சந்தை நகர்ந்து செல்லும், இந்த மாதிரி ஏற்ற இறக்கங்களுடன் நகர்வதை கவனித்தவர்கள், தொடர்ச்சியாக எந்த விதமான நகவுகளிலும் (உயர்வு மற்றும் வீழ்ச்சி) சந்தை இந்த முறையில் தான் நகர்கிறது என்பதினை கண்டுணர்ந்தனர், மேலும் இது போன்று நகர்வதில் சந்தை   சில விதி முறைகளையும் கடை பிடிப்பதையும் கண்டுணர்ந்தனர்,
ஆகவே இதனை தொகுத்து! இந்த விசயத்திற்கு ஒரு பெயரிட்டு! இது போன்று நடந்தால் இதன் விளைவுகள் இப்படி தான் இருக்கின்றது என்பதினை நமக்கு TECHNICAL ANALYSIS மூலம் தெரிவித்தார்கள், அதன் படி இதற்க்கு பெயர் STYLE OF PRICE MOVE என்று தலைப்பு வைத்து, அந்த தலைப்பின் கீழ்! கீழ் கண்ட விசயங்களை தெரிவித்தார்கள்,
அதாவது சந்தையில் உள்ள பங்குகள் எப்பொழுதும் ஒரு இலக்கை வைத்து உயர தொடங்கும் போது, முதலில்  உயர்வது பிறகு சற்று இளைப்பாறல் மற்றும் பகுதி லாபங்களை உறுதி செய்துகொள்தல் மற்றும் தின வர்த்தகர்களின் அவசரகதியான  செயல்பாடுகள் மற்றும் சந்தையின் போக்குகள் என்பன போன்ற காரணக்களால் சற்று கீழிறங்கி மறுபடியும் உயர்தல், மறுபடியும் கீழிறங்கி மறுபடியும் உயர்தல் இப்படியாக தனது இலக்குகளை அடைவதற்குள் அநேக சின்ன சின்ன உயர்வு தாழ்வுகளை கொண்டே நகர்ந்து வருகிறது,
இவ்வாறு ஏறி இறங்கி! ஏறி இறங்கி நகந்து வருவதில் சில அனுகூலமான விசயங்களையும் கண்டுனர்ந்தார்கள், அதன் படி ஒரு தீர்கமான முடிவுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளின் படி இந்த மாதிரி உயரும் போது எந்த இடத்தில் இருந்து இளைப்பாறல் பெறுவதற்காக சற்று கீழ் இறங்கிகிறதோ அதற்க்கு TOP என்றும், அது தொடர்ந்து உயரத்தில் செல்வதற்கான இலக்குகளை பெற்று இருப்பதால் அந்த TOP ஐ HIGHER TOP என்றும்  பெயரிட்டார்கள்,
அதே நேரத்தில் எந்த இடத்தில் (LOW POINT) இருந்து மறுபடியும் உயர கிளம்புகிறதோ அதற்க்கு BOTTOM என்றும்! தற்பொழுது இந்த பங்கு தொடர்ந்து உயரும் இலக்குகளை பெற்று இருப்பதால் அந்த BOTTOM ஐ  HIGHER BOTTOM என்றும் பெயரிட்டார்கள், இவ்வாறு அந்த பங்கு தொடர்ந்து தான் உயரத்தில் அடைய வேண்டிய இலக்கை அடையும் வரையும் இதே போன்று உயர்ந்து மறுபடியும் சிறிது இறங்கி! இப்படியே தொடர்ந்து நகர்ந்துதான் தனது இலக்குகளை அடையும், இதற்க்கு  பெயர்  தான்  HIGHER TOP மற்றும்  HIGHER BOTTOM ,
இப்படியே தொடர்ந்து ஏறிக்கொண்டே இல்லாமல் தனது அடைய வேண்டிய இலக்குகள் முடிந்தவுடன் கீழே வர வேண்டிய கட்டாயம் ஏற்படும் இல்லையா,  அப்படி எந்த இடத்தில் தனது உயரும் திசையினை  மாற்றி இறங்கும்  திசையினை நோக்கி வரப்போகிறது என்பதினை  இந்த  HIGHER TOP மற்றும்  HIGHER BOTTOM ஐ வைத்து  ஒரு முடிவுக்கு வருவதின் மூலம் அறிந்து கொள்ளலாம்,
அதாவது தொடர்ந்து HIGHER TOP மற்றும்  HIGHER BOTTOM என்று உயர்ந்து வரும் நேரத்தில்! உயரத்தில் ஏற்படும் இறுதியான HIGHER TOP மற்றும்  HIGHER BOTTOM மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதாவது இறுதியாக ஒரு HIGHER BOTTOM ஏற்பட்டவுடன் மறுபடியும் உயரத்தில் முன்னேறி சென்று, இதற்க்கு முன் ஏற்பட்ட HIGHER TOP ஐ உடைத்து புதிய HIGHER TOP ஐ உருவாக்காமல், திணறி! மறுபடியும் கீழே வந்து தற்பொழுது ஏற்பட்டிருக்கும் HIGHER BOTTOM ஐ மறுபடியும்   கீழே கடந்து   செல்லும் போது இந்த உயர்வு ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது,
மேலும் இது போன்று ஏற்பட்ட பின்பு அந்த பங்கு தொடர்ந்து கீழே வர முயற்சி செய்ய ஆரம்பிக்கும், இவ்வாறு இறங்க ஆரம்பித்தவுடன் முன்னர் உயரும் போது எப்படி ஏறி இறங்கி ஏறி இறங்கி சென்றதோ, அதே முறையில் தான் இப்பொழுதும் நகரும், அதாவது இறங்கி ஏறி இறங்கி ஏறி செல்லும், ஆனால் நகர்வு  கீழ் நோக்கியதாக இருக்கும் இல்லையா,
அதன்படி முதலில் HIGHER BOTTOM ஐ கீழே கடந்து சென்று பின்பு மீண்டும் மேலே உயரும், அப்படி உயர்ந்து மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து கீழே இறங்க ஆரம்பிக்கின்றதோ அதற்க்கு TOP என்றும், இப்பொழுது இறங்கும் இலக்குகளை பெற்று இருப்பதால் இதற்க்கு LOWER TOP என்று பெயர்,
மறுபடியும் முன்னர்  ஏற்பட்ட   BOTTOM புள்ளியை கீழே கடந்து சென்று, மறுபடியும் எந்த புள்ளியில் இருந்து சற்று உயர ஆரம்பிக்கின்றதோ அதற்க்கு BOTTOM என்றும் இப்பொழுது  இறக்கத்தில் இருப்பதால் இதற்க்கு LOWER BOTTOM என்று பெயர்,
ஆகவே இந்த இறக்கம் முழுவதும் LOWER TOP மற்றும் LOWER BOTTOM என்ற வகையில் தான் நகரும், மேலும் முக்கியமான நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், HIGHER TOP மற்றும் HIGHER BOTTOM என்ற முறையில் உயரும் போது ஒவ்வொரு தடவையும் HIGHER TOP எனப்படும்  பழைய உயரங்களை கடந்து செல்ல வேண்டும்,மேலும் HIGHER BOTTOM எனப்படும் பழைய LOW புள்ளிகளை கீழே கடக்காமல் இருக்க வேண்டும்,
அதே போல் LOWER TOP மற்றும் LOWER BOTTOM என்ற வகையில் நகர்வுகள் கீழ் நோக்கி  இருக்கும் போதும் ஒவ்வொரு தடவையும் LOWER BOTTOM எனப்படும் LOW புள்ளிகளை கீழே கடந்து புதிய LOWER BOTTOM களை சந்திக்க வேண்டும், அதே நேரம்  LOWER TOP என்ற புள்ளிகளை கடந்து மேலே செல்ல கூடாது,
ஆகவே இங்கு HIGHER TOP & HIGHER BOTTOM என்ற முறையில் செல்லும்போது S/L ஆக இறுதியாக ஏற்படும் HIGHER BOTTOM என்ற புள்ளி  கீழே கடக்கப்பட வேண்டும்  என்றும், LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் செல்லும்போது S/L ஆக இறுதியாக ஏற்படும் LOWER TOP மேலே கடக்கப்பட  வேண்டும்  என்றும்   வைத்துக்கொள்ளுங்கள்,
பொதுவாக இவ்வாறு HIGHER TOP & HIGHER BOTTOM என்ற முறையில் உயர்ந்து, LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் கீழே வந்து ஆரம்பித்த இடத்திலே நிற்கும் பொது CUP என்ற வடிவம் ஏற்படும், ஆகவே தான் நான் முன்பே சொன்னேன் ஒவ்வொரு வடிவத்திலும் இந்த CUP என்ற வடிவம் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்று,
மேலும் இந்த CUP FORMATION என்ற அமைப்பு HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும்  LOWER TOP & LOWER BOTTOM என்ற முறையில் விலைகளின் நகர்வுகள் அடுக்கடுக்காக  ஏற்படுவதினால் அமையும், ஆகவே முதலில்  HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும்  LOWER TOP & LOWER BOTTOM, பிறகு CUP பிறகு மற்றதெல்லாம் வருசயாக வரும்,
சரி இப்பொழுது CUP WITH HANDLE மற்றும் HIGHER TOP & HIGHER BOTTOM மற்றும்  LOWER TOP & LOWER BOTTOM போன்றவைகளின் படங்களை பாருங்கள், சந்தேகம் இருந்தால் கேளுங்கள் மீதத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்


text=adstext=ads