பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25

பயில்வோம் பங்குச் சந்தை பாகம் 25

                 கடந்த வாரம் Head & Shoulder பற்றி பார்த்தோம், இந்த வாரம் அடுத்த வடிவங்களை பற்றி பார்ப்போம், அந்த வகையில் இந்த வாரம் Triangle  Patternபற்றி பார்ப்போம்
TRIANGLE PATTERN
Chart படங்களில் முக்கோணம் போன்ற அமைப்புகள் உருவாகும் பொழுது ஏற்படும் விளைவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம், பொதுவாக இது போன்ற அமைப்புகள் chart படங்களில்  எந்த விதமான இடங்களிலும் ஏற்படலாம், அதாவது பங்குகளின் நகர்வுகளுக்கு முந்தய நிலையில் இருக்கும் வடிவங்களை Real Pattern என்றும், நகர்வுகளின் இடையே ஏற்படும் வடிவங்களை Consolidation Pattern என்றும் இரு வகைபடுத்தலாம்,

அந்த வகையில் இந்த Triangle என்ற வடிவம் மேற்கண்ட இரு இடங்களிலும் ஏற்படலாம், எந்த இடங்களில் ஏற்பட்டாலும் இந்த வடிவத்துக்கு அதிக பலம் என்பது மட்டும் நிச்சயம், உதாரணமாக நமது ஜாதக கட்டங்களில் நல்ல இடத்துக்கு உரிய  கிரகங்கள் கேந்திர கோணங்களில் உச்சமாகும் போது ஏற்படும் பலம் இந்த அமைப்பிற்கு எப்பொழுதும் உண்டு,

மேலும் இந்த வடிவம் நமது chart படங்களில் எவளவு சிறியதாக இருந்தாலும் அதற்குரிய பலனை விரைவாக தரும் என்பது எனது அனுபவம், ஆனால் வடிவங்களின் break out புள்ளிகளை மிகச்சரியாக கண்டுபிடித்து செயலாற்ற வேண்டும், அப்பொழுது தான் சரியான வர்த்தகத்தை நாம் செயல்படுத்த முடியும்,

இன்னும் சொல்லபோனால் இந்த Triangle அமைப்பை பொறுத்தவரை அந்த கஷ்டம் கூட நமக்கு இருக்காது என்பதும் உண்மையே, இந்த அமைப்பை நாம் கண்டு கொள்வதும் எளிதானதே, மேலும் இந்த அமைப்பின் s/l கூட மிக அருகில் கிடைக்கும் வாய்ப்புகளும் ஏற்படும், மொத்தத்தில்  இந்த வடிவம் அதிக பட்ச நம்பிக்கைக்கு உரிய! சற்று பாதுகாப்பு அதிகமான! இலக்குகளை துல்லியமாக கொடுக்கும் வடிவம் என்று சொன்னால் மிகையாகாது,

சரி இந்த வடிவத்தை பற்றி இன்னும் சில விசயங்களை பார்ப்போம்,அதாவது  இந்த வடிவம் முக்கோண வடிவம் என்று சொன்னாலும், சொல்லி வைத்தார் போல் நமது மனதில் இருக்கும் முக்கோண வடிவத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று இல்லை, நாம் முன்னரே பார்த்தோம் இல்லையா அதாவது இயற்கையாக ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் மாற்று கோணம் கொண்டு பார்ப்பதற்கும் அநேக வித்தியாசம் உண்டு என்று,

இதே போல் தான் chart படங்களில் ஏற்படும் வடிவங்கள் எப்பொழுது சொல்லி வைத்தார் போல் இருக்காது, அந்த வடிவங்களை கண்டு அதன் break outபுள்ளியை தேர்ந்தேடுப்பதற்க்குள் அநேக கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டி வரும், மேலும் இதனை சற்று எளிமைபடுத்திட! சற்று தெளிவுபடுத்திடகடந்த பாகங்களில் வித்தியாசமான படங்களை உங்களுக்கு  கொடுத்து சிறு பயிற்ச்சியும் அளித்தோம், அந்த பயிற்சி இது போன்ற தருணங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்,

மேலும் எனது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு தொடர் பயிற்ச்சிகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்புகள் முடிந்து மூன்று மாதத்திற்கு அடுத்த நாள் எந்த பங்குகள் உயரலாம், அந்த பங்குகள் உயர்வதற்கு என்ன விதமான வடிவங்கள் காரணமாக இருக்கிறது என்பதினை chart படங்களுடன் அனைவரது மின் அஞ்சலுக்கும் தினமும்  மாலை  அனுப்பி வைக்கின்றோம்,

இவ்வாறு செய்யும் போது நமது வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களை  அறியாமலேயே  இந்த  chart படங்களில் இந்த வடிவம் ஏற்படுகிறது            என்ற எண்ணமும், ஒரு chart படத்தை பார்க்கும் போது இதில் இந்த வடிவம் புதைந்துள்ளது என்ற பயிற்ச்சியும் அனிச்சை செயலாக வந்துவிடும், இதற்காக தான் இந்த பயிற்ச்சியை நாங்கள் அளிக்கின்றோம்,இந்த பதிவுகளை படிப்பவர்கள் இது மாதிரியான பயிற்ச்சியை மேற்கொள்வது முக்கியம், சித்திரமும் கைபழக்கம் என்ற பழமொழி இதற்க்கு சால பொருந்தும்,            

ஆகவே பயிற்சி செய்யுங்கள், சரி இந்த முக்கோண வடிவம் பல வகைகளில் ஏற்படும்

அதாவது

எப்பொழுதும் போல் உள்ள முக்கோணம்,
சற்று சாய்ந்து கீழே நோக்கி நிற்கும் முக்கோணம்,
சற்று உயர்ந்து மேல் நோக்கி நிற்கும் முக்கோணம்,
அனைத்திற்கும் மேலாக  ஒரு மாதிரி இது முக்கோணமா  இல்லை வேறு ஏதுமா என்ற என்னத்தை கொடுக்கும் முக்கோணம்

என்று வகைபடுத்தலாம், எது எப்படி ஆனாலும், அப்படி இப்படி என்று இருந்தாலும் பரவாயில்லை முக்கோணத்தின் சற்றேறக்குறைய உருவங்கள் வந்து விட்டாலே அது முக்கோணம் தான் break out கிடைத்தவுடன் வர்த்தகத்தை ஆரம்பித்து விட வேண்டியது தான், போதிய பயிற்சி ஏற்பட்டவுடன் உங்களுக்கு எளிமையாக புரிந்துவிடும் கவலைபடாதீர்கள்,

இவைகளை எல்லாம் எனது அநுபவத்தி நான் கண்ட உண்மைகள், பங்கு சந்தைகளில் ஏட்டு சுரைக்காய் என்றும் உதவாது, ஆகவே நான் இங்கு உங்களுக்கு தருவதெல்லாம் எனது அனுபவங்கள், அதிலும் வெற்றிகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் அனுபவங்கள், ஆகவே சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள், இலவசமாக கிடைப்பதால் மேம்போக்காக சென்று விடாதீர்கள், என்னால் முடிந்த வரை எவளவு எளிமைபடுத்தி தர முடியுமோ அவளவு எளிமைபடுத்தி தந்துள்ளேன், ஆகவே கவனமாகவே படியுங்கள்,

சரி இந்த முக்கோணத்தின்  இலக்குகளை நாம் எப்படி கண்டறிவது,பொதுவாக முக்கோண அமைப்பின் உயரம் தான் அந்த அமைப்பு break outபெறும்போது அதன் இலக்காக இருக்கும், இதன் s/l ஆக அந்த முக்கோணத்தின் support கோடு எந்த புள்ளியில் வருகிறது அந்த புள்ளி s/l ஆக செயல் படும்,

சரி இந்த அமைப்பின் படங்களை பாருங்கள் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்
text=adstext=ads