பயில்வோம் பங்கு சந்தை பாகம் 26

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 26


           கடந்த வாரம் Triangle Pattern பற்றி பார்த்தோம், இப்பொழுது அடுத்த வடிவமான Channel என்ற அமைப்பினை பற்றி பார்ப்போம், Channel என்பது Train  தண்டவாளத்தை போன்று இரு பக்கங்களிலும் சரியான அளவுகளில் இருப்பது, இந்த  channel என்ற அமைப்பின் இடைப்பட்ட  பகுதிகளில் பங்குகளின் நகர்வுகள் இருக்கும்,

இவ்வாறு நகர்ந்து வரும் போது சேனல் அமைப்பின் Tops எனப்படும் உயரங்களில் தடைகளை சந்தித்து கீழே வந்து, மறுபடியும் சேனல் அமைப்பின் bottom எனப்படும் support பகுதிகளில் தங்கி மறுபடியும் உயர ஆரம்பிக்கும் இவ்வாறு சேனல் அமைப்பின் top பகுதிகளில் தடை எடுத்து கீழே வந்து bottom பகுதிகளில் support எடுத்து மறுபடியும் உயரும் இந்த இடப்பட்ட பகுதிகள் சரியான நேர்கோட்டில் இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த வடிவத்தை நாம் பார்க்கும் போது தண்டவாளத்தின்  ஒழுங்கு நன்றாக தெரியும்,

இந்த இடைப்பட்ட பகுதிகளில் எத்தினை முறை வேண்டுமானாலும் நகர்ந்து செல்லலாம், ஆனால் என்று இந்த சேனல் அமைப்பு break out என்ற முறையில் உடைபடுகிறதோ அங்கிருந்து நகர ஆரம்பிக்கும், இவ்வாறு நகர வேண்டிய இலக்குகள் கீழ் நோக்கியதாக இருக்கலாம் அல்லது மேல் நோக்கியதாக இருக்கலாம், எப்படி நகர்ந்தாலும் இந்த அமைப்பின் படி அதன் இலக்கு ஒரே அளவாக தான் இருக்கும்,

அதாவது இந்த சேனல் அமைப்பின்படி கிடைக்கும் இலக்கு இரண்டு பக்கங்களுக்கும் ஒன்றாக தான் இருக்கும், இதன் இலக்குகள் இந்த சேனல் அமைப்பின் இரண்டு புள்ளிகளுக்கும்  இடைப்பட்ட உயரமாக இருக்கும், அதே நேரம் இந்த அமைப்பின் படி s/l ஆக நாம் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்! அதாவது உயர்வதற்காக Channel Pattern break out  பெற்றால் இதன் s/l ஆக நாம் அந்த சேனல் அமைப்பின் bottom support புள்ளியை  தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும் ,

அதே நேரம் இந்த channel அமைப்பிற்குள் ஏற்படும் வேறு ஏதாவது சின்ன சின்ன அமைப்புகளையும், Tend line support களையும், Fibonacci அளவுகளையும் பயன்படுத்தி நமது s/l ஐ  சற்று முன்னரே தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு, இவ்வாறு கண்டு பிடிக்க சற்று பயிற்சி தேவை, அந்த  பயிற்சி  ஏற்பட்டவுடன் இயல்பாக நாம் அதை தேட ஆரம்பித்து விடுவோம்,

பொதுவாக இந்த சேனல் அமைப்பிற்குள் ஒரு பங்கு நகர ஆரம்பித்தால் நாம் அதன் support புள்ளிகளின் அருகே வாங்கி தடை புள்ளிகளான உயரங்களில் விற்று வர்த்தகம் செய்யலாம், அதாவது channel bottom இல் வாங்கி channel top வரும் போது விற்பது என்று  வர்த்தகம் செய்யலாம், இப்படி செய்தால் நமது s/l மிக அருகிலே இருக்கும், பெரிய இழப்புகள் ஏதும் இருக்காது,

அதாவது ஒரு பங்கு 100 என்ற புள்ளியை சேனல் support (Bottom) ஆகவும் 135 என்ற புள்ளியை சேனல் தடையாகவும் (Top) பெற்று இருந்தால், நமது வர்த்தகம் 100 to 102 என்ற புள்ளி வரும் போது buying செய்து 135 என்ற புள்ளி வரும் போது விற்க வேண்டும், ஒரு வேலை நீங்கள் வாங்காமல் அந்த பங்கை 133 to 135 என்ற புள்ளிகளில் இருக்கும் போது கவனிக்க நேரிட்டால் இந்த புள்ளியின் அருகே விற்று மறுபடியும் 100 என்ற புள்ளி கீழே வரும் போது வாங்கிக்கொள்ளலாம்,

இது போன்று நீங்கள் செய்வதால் உங்களின் s/l மிக அருகிலேயே இருக்கும் அதாவது 135 என்ற புள்ளி சேனல் தடை புள்ளியாக இருப்பதால் இந்த புள்ளியை மேலே கடந்தால் அது தொடர்ந்து ஏற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும், ஆகவே நீங்கள் 134 to 135 என்ற புள்ளியின் அருகே விற்றால் உங்களின் s/l 135, அப்படி 135 என்ற புள்ளியை உடைத்து மேலே சென்றால் நீங்கள் 135 என்ற புள்ளியை s/l ஆக வைத்து இருப்பதால் உங்களின் நட்டம் வெறும் 1 to 2 ரூபாயாக தான் இருக்கும், மேலும் இந்த புள்ளியை உடைத்து இருப்பதால் தொடர்ந்து ஏறும் வாய்ப்புகளும் இருப்பதால் உடனே நீங்கள் buying  செய்யலாம் புரிகிறதா!

ஆகவே சேனல் அமைப்புகளில் இது போன்று வர்த்தகம் செய்யும் சாத்தியங்கள் இருப்பதால் இதனை நன்றாக பயன்படுத்தலாம், அப்படி இல்லை இது எனக்கு கஷ்டமாக உள்ளது என்றால் இந்த சேனல் அமைப்பு எப்பொழுது உடைபடுகிறதோ அப்பொழுது வரை பொறுத்து இருக்கலாம்,,,

சரி இந்த சேனல் அமைப்பை பொறுத்தவரை மூன்று விதங்களில் நமது chart படங்களில் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு, அவைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம், அதாவது முன்னர் நாம் Head & Shoulder என்ற அமைப்பில் பார்த்தோம் இல்லையா அதே போன்ற வகையில்  தான் இந்த சேனல் அமைப்பும் இருக்கும், அதாவது Normal Channel Pattern, Raising Channel Pattern, Sloping Channel Pattern என்ற இந்த மூன்று விதங்களில் ஏற்படும், இவை ஒவ்வொன்றுக்கும் நாம்  ஒவ்வொரு மாதிரி செயல்பட வேண்டும், அவைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம் ,

NORMAL CHANNEL PATTERN

இந்த   அமைப்பை பொறுத்த வரை நாம் இதற்க்கு முந்தய பத்தியில் படித்தது போலவே செயல்பட வேண்டும், அதாவது கீழே வரும் போது வாங்கி மேலே சென்ற பின் விற்பது, மேலும் மேலே விற்று கீழே வந்த பின்பு வாங்குவது, பிறகு எந்த பக்கம் break out பெறுகிறதோ அந்த திசையில் நமது வர்த்தக பாதைகளை மேற்கொள்வது, இதற்க்கான s/l நாம்  முன்னர்  பார்த்த விதங்களில் எடுத்துக்கொள்வது, அவளவு தான் விஷயம்! சரி இதற்கான படத்தை பாருங்கள்RAISING CHANNEL PATTERN

இந்த Raising Channel Pattern ஐ பொறுத்த வரை இதன் வடிவம் நாம் முன்னர் சொன்னது போல தண்டபாலத்தை போல தான் இருக்கும், அதே நேரம் சற்று செங்குத்தாக இருக்கும், இதனை பொறுத்த வரை உயரங்களில்  விற்று கீழே வரும் போது வாங்கலாம் என்பதும்,  கீழே வந்த பின் வாங்கி உயரங்களில் விற்கலாம் என்பதும் அநேகம் தடவை யோசித்து செயல்பட வேண்டிய விசயமாகும்!  ஏனெனில்  ஏமாற்றும் வாய்ப்புகள் உள்ளது,

செங்குத்தாக தொங்கிக்கொண்டு இருக்கும் கயிற்றில், ஏறுவதில் இருக்கும் சிக்கல் சற்று அதிகம், விழுந்தால் ஏதும் மிஞ்சாது, அதே நேரம் இந்த அமைப்பில் buying செய்வதற்கான break out கிடைத்தாலும்  கொஞ்சம் யோசித்து அநேக சாத்தியக்கூறுகளும் சாதகமாக உள்ளதா என்று பார்த்து வர்த்தகம் செய்வது பாதுகாப்பானது,

அதற்காக வர்த்தகம் செய்யவே வேண்டாம் என்று சொல்ல வில்லை பாது காப்பை பலப்படுத்தி  களத்தில் இறங்குவது  வெற்றிக்கான முதல் செயல், அதே நேரம் இந்த அமைப்பில் selling செய்வதற்கான break out கிடைத்தால் தைரியமாக ஈடுபடலாம் விரைவான லாபங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் இந்த அமைப்பிற்கு அதிகம், இதன் இலக்குகள் மற்றும் s/l எல்லாம் நாம் முன்னர் பார்த்தது போலவே தான், சரி இந்த படத்தை பாருங்கள்SLOPING CHANNEL PATTERN

Sloping Channel Pattern ஐ பொறுத்தவரை அப்படியே  Raising  Channel Pattern  க்கு எதிர் பதமானது, இந்த அமைப்பு சற்று கீழ் நோக்கியது போல் காட்ச்சியளிக்கும், ஆனால் சரியான அளவுகளுடன் சேனல் என்ற வடிவத்தில் தான்  இருக்கும், இந்த அமைப்பை பொறுத்தவரை selling செய்வதற்கு break out கிடைத்தால் சற்று யோசித்து! அனைத்து சாத்தியக்கூறுகளும் சாதகமாக இருக்கின்றதா என்று பார்த்து வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் , அதே நேரம் buying செய்வதற்கான break out கிடைத்தால் நன்றாக தைரியமாக வர்த்தகத்தில் ஈடுபடலாம், முன்னர் சொன்னது போலவே இதன் இலக்குகளை கண்டு பிடிப்பதும் s/l ஐ கண்டு பிடிப்பதும் ஒரே முறை தான்,

பொதுவாக Raising Channel மற்றும் Sloping Channel ஆகிய இரண்டிலும் உயரங்களில் விற்று, bottom புள்ளிகளில் வாங்கியும் bottom புள்ளிகளில் வாங்கி உயரங்களில் விற்பதையும் தவிர்ப்பதினால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாம், இது ஒரு பாதுகாப்பிற்க்காக தான் சொல்கிறேனே தவிர நல்ல பயிற்சி ஏற்பட்ட பின்பு எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம்  செய்யலாம், அதே நேரம் Normal Channel அமைப்பில் நாம் முன்னர் பார்த்தது போல எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம்,, சரி இந்த படத்தையும் பாருங்கள்,

இன்னும் ஒரு  சில பதிவுகளில் நமது பயில்வோம் பங்கு சந்தை தொடர் நிறைவு பெரும் என்று  நினைக்கின்றேன் 
text=adstext=ads