பயில்வோம் பங்கு சந்தை பாகம் 28

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 28


           கடந்த பதிவில் FLAG, PENNANT, W ஆகியPATTERN களை பற்றி பார்த்தோம், இப்பொழுதுROUNDING BOTTOM என்ற விஷயத்தை பற்றி பார்ப்போம், பொதுவாக இது போன்ற விஷயங்கள் குறைந்தது 3 மாதம் முதல் 1வருடம் அல்லது அதற்க்கு மேல் கால அளவுகளை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்பவர்கள்  கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம்,

இது போன்ற விசயங்களை  வைத்து நீண்ட கால அடிப்படையில் சில நல்ல பங்குகளை TECHNICAL ஆக நாம் கண்டு கொள்ளலாம், பொதுவாக இந்த விஷயம் நல்லதொரு இறக்கம் சந்தையில் ஏற்பட்ட பின்பு உருவாகும் ஒரு வடிவமாகும், இந்த வடிவத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் சந்தையில் CORRECTION எந்த மாதிரி வருகிறது, இவ்வாறு இறக்கம் ஏற்படும் போது எப்படியான வடிவங்களில்  ஏற்படுகிறது என்பதினை தெரிந்து கொள்வது சற்று பயனுள்ளதாக இருக்கும்,

ஏனெனில் சந்தையில் எப்பொழுதெல்லாம் CORRECTION வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு சில வடிவங்களின் கூட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டே நடந்து  வந்து கொண்டு இருக்கிறது, இது போன்ற செயல் TECHNICAL ANALYSIS இன் தந்தை என போற்றப்படும்  திரு CHARLES DOW  அவர்களின் விதிமுறையான "HISTORY REPEATS IT SELF" என்பதை ஞாயபகபடுத்திக்கொண்டே இருக்கும், சரி விசயத்திற்கு வருவோம்,

CORRECTION எப்படி ஏற்படுகிறது –

பொதுவாக CORRECTION என்பதினை இரு வகையாக பிரிக்கலாம், ஒன்றுMOMENTUM TREND LINE ஐ உடைக்காமல் அங்கிருந்து SUPPORT எடுத்து திரும்பிபுதிய உயரங்களை எட்டும் சராசரி CORRECTION, MOMENTUM TREND LINE ஐயும் உடைத்து மிக பலமான வீழ்ச்சிகளை கொடுக்கும் BIG CORRECTION,

இதில் முதல் வகை அடிக்கடி ஏற்படக்கூடியது, உதாரணமாக 2004, 2005, 2006, 2007 போன்ற வருடங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிகளை சொல்லலாம், இரண்டாவது வகை 2008 ஆம் ஆண்டு JANUARY ல் ஏற்பட்ட வீழ்ச்சியை போன்றது, நாம் இப்பொழுது பார்க்கப்போவது இரண்டாவது வகை CORRECTION பற்றி தான்,ஏனெனில் இந்த இரண்டாம் வகை தான் மிக நீண்ட நாட்களுக்கு நடந்து, CONSOLIDATION எனப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மாறி பிறகுBREAK OUT என்ற விளைவினை பெற்று தொடர்ந்து முன்னேறும் மிக நீண்ட செயல் பாடுகளை கொண்டது,

இதற்க்கு தான் வடிவங்கள் உண்டு, அதற்க்கான விளைவுகளும் உண்டு,மாறாக முதல் வகையான CORRECTION ஐ பொறுத்தவரை உடனே நிகழ்ந்து விரைவிலேயே அடுத்த கட்டத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியது,இதற்க்கு ஒன்றும் பெரிய விளைவுகள் இருக்காது, பொதுவாக இது ஏதாவது அனுமானத்தினாலும், செய்திகளினாலும் உந்தப்படுவது, சரி இப்பொழுது இரண்டாவது CORRECTION ஐ பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்

MOMENTUM TREND LINE ஐ உடைத்து மிக அதிகமாக இறக்கம் பெரும்CORRECTION:-

பொதுவாக இது போன்ற CORRECTION நல்ல தொரு உயர்வை அடைந்த பிறகே ஏற்படும், அதே நேரம் இது போன்ற உயர்வுகள் ஏற்படும் முன்பு நாம் முன்னர் பார்த்த SINGLE CANDLE, DOUBLE CANDLE என்ற வகையில்! தான் இறங்கப்போவதாக தொடர்ந்து அறிவித்த பிறகே தனது இறக்கத்தை ஆரம்பிக்கும், மேலும் இது போன்று CANDLE கள் ஒரு RISING WEDGE என்ற அபாயகரமான வடிவங்களுக்கு உள்ளே ஏற்பட்டு அந்த வடிவம் கீழே உடைபட்டவுடன் இறங்க  ஆரம்பிக்கும்,

இவ்வாறு இறக்கங்கள் தொடங்கிய பிறகு ஏற்படும் வீழ்ச்சிகள் மிக பலமானதாக இருக்கும், யாரும் கனவிலும் நினைக்காத அளவிற்கு கீழே கொட்டோ கொட்டு என்று கொட்டி விடுவார்கள், இது போன்ற நிகழ்ச்சிகளை தான் BLOOD BATH என்று சொல்வார்கள், இது போன்ற வீழ்ச்சிகள் ஒரு பத்து பதினைந்து  நாட்களில் MOMENTUM TREND LINE எனப்படக்கூடிய SUPPORTபுள்ளிகளை உடைத்து விடும் அதாவது 2008 ஆம் வருடம்  NIFTY யானது  6350என்ற புள்ளியில் இருந்து 4450 என்ற புள்ளிகளை வெறும் 10 TO 15நாட்களுக்குள் சென்றடைந்ததை உதாரணமாக சொல்லலாம்,


இவ்வாறு ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிகளை அடைந்த பிறகு சந்தையில் எதிர்பார்க்காத ஒரு உயர்வு ஏற்படும் இந்த மாதிரியான உயர்வு எப்படி வெகு விரைவாக இறங்கியதோ அதைவிட விரைவாக உயரும், அதாவது எந்த புள்ளியில் இருந்து கீழே இறங்கி LOW எனப்படும் வீழ்ச்சி புள்ளிகளை சந்தித்ததோ அந்த வீழ்ச்சியில் 61.8% சதவீத அளவிற்கு தோராயமாக உயர்ந்து விடும்,

அதாவது NIFTY 4450 என்ற புள்ளியில் இருந்து 4545 என்ற புள்ளியை வெறும் 7நாட்களுக்குள் அடைந்ததை போன்று, மேற்கண்ட விசயங்களில் மூன்று படிப்பினைகளை நாம் அறியலாம்,


அதாவது முதலில் RISING WEDGE எனப்படும் வடிவத்திற்குள் நாம் முன்னர் பார்த்த SINGLE , DOUBLE போன்ற  CANDLE களை வைத்து வீழ்ச்சியை அறிவிப்பது, இரண்டாவது அந்த வடிவத்தை உடைத்து மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திப்பது, மூன்றாவது சந்தை அவளவு தான் என்ன நடக்கப்போகிறது என்று எல்லோரும் பூகம்பம் வந்தது போல் சந்தையை கண்டு அஞ்சி நிற்கும் போது திடீரென வீழ்ச்சியில் இருந்து அதி விரைவாக ஒரு 61.8 % அளவிற்கு  உயர்ந்து  விடுவது,

இப்பொழுது வீழ்ச்சியின் கோர தாண்டவம் ஓரளவிற்கு  முடிந்து விடும்,அடுத்ததாக வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் நமது பொறுமையை சோதிப்பது போலவும், நித்தய கண்டம் பூரண  ஆயுள் என்ற வகையிலும் நம்மை படுத்தி எடுத்து விடும் ,

அதாவது 61.8 % உயர்ந்த பிறகு மறுபடியும் வீழ்ச்சி! பிறகு உயர்வு! பிறகு வீழ்ச்சி என்று தொடர்ந்து இயங்க ஆரம்பிக்கும், இந்த நகர்வுகள் எல்லாம்LOWER TOP, LOWER BOTTOM என்ற வகையில் ஒருSLOPING CHANNEL வடிவத்தில் நடக்க ஆரம்பிக்கும், இது போன்ற நேரங்களில் முன்னர் நாம் சந்தித்த மிக விரைவான வீழ்ச்சியினால் ஏற்பட்ட LOWபுள்ளியையும் உடைத்து புதிய LOW புள்ளிகளை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்,

இப்படி நடக்கும் ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும் முதலீட்டாளர்கள் தின வர்த்தகர்கள் தங்கள் கைகளை சுட்டுக்கொண்டே இருப்பார்கள், ஒரு வழியாக எல்லோரும் CORRECTION ஐ  ஏற்றுக்கொண்டு சந்தையை விட்டு வெளியேர ஆரம்பிப்பார்கள்,

இந்த நிலையில் சந்தை தனது நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிற்குள் வைத்து மேலும் கீழும்  ஆடி TECHNICAL ஆக தொடர்ந்து ஏறுவது போல் காட்டி அனைவரையும் ஏமாற்றி மறுபடியும் கீழே இறக்கி,தொடர்ந்து இன்னும் இறங்குவது போல் காட்டி சற்று கீழே இறக்கி மறுபடியும் தொடர்ந்து உயர்ந்து BREAK OUT என்ற  நிலையை  அடையும், (எப்பொழுதுமே சந்தை நல்லதொரு CORRECTION மற்றும் CORRECTION இல் இருந்து மீளும் போதும் தவறுகளை செய்த பின்பே ஒரு நிலையான தன்மையை அடையும் என்பது எனது அனுபவ பாடம் ),

இவ்வாறு  உயரும் நிலை ஏற்பட்டவுடன் தொடர்ந்து ஏற ஆரம்பிக்கும்,இந்த நிலை HIGHER BOTTOM மற்றும் HIGHER TOP என்ற வகையில் அமைந்து புதிய உயரங்களை அடையும், இந்த நிலை நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டு தான் புதிய உயரங்களை அடையும், ஏன் எனில் மறுபடியும் ஒரு புதிய குழந்தை பிறப்பதற்கு சமமானது இந்த CORRECTIONக்கு பிறகு ஏற்படும் உயர்வு,

சரி இந்த இடத்தில் நாம் ROUNDING BOTTOM பற்றி தெரிந்து கொள்வது சரியாக இருக்கும், அதாவது SLOPING CHANNEL என்ற வடிவத்தில் இறக்கங்கள் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து உயருவதற்கு BREAK OUT என்ற நிலையை அடையும் இந்த  இடைப்பட்ட இடத்தில் தான் CONSOLIDATION எனப்படும் பங்குகளை நல்ல விலைக்கு வாங்கும் நிகழ்வுகள் நடக்கும்,

இந்த நிகழ்வுகளுக்கு பின் ஏற்படும் BREAK OUT நல்ல முறையில் சக்திகளை பெற்று நகரும், இந்த CONSOLIDATION பகுதியில் நாம் பங்குகளை வாங்குவதும் BREAK OUT பெற்ற பிறகு வாங்குவதும் தான் ROUNDING BOTTOM BUYING எனப்படும், இருந்தாலும் தொடர் உயர்வுகள் BREAK OUT பெற்ற பிறகே அதிக சக்தியை பெரும், பொதுவில் எந்த இடத்தில் இருந்து சந்தை வீழ்ச்சியை தொடங்கியதோ அந்த புள்ளியில்  இருந்து வரையப்படும் TREND LINE முதல் BREAK OUT என்ற  வகையில் சக்தியை பெரும்,

ஆனால் எப்பொழுதும் மூன்றாவதாக அமையும் TREND LINE உண்மையானBREAK OUT ஐ  நமக்கு பறை சற்றும், அதாவது SLOPING CHANNEL மூலம் கிடைக்கும் இரண்டாவது BREAK OUT, CONSOLIDATION எனப்படும் நிகழ்வு நடக்கும் வடிவத்தின் மூலம் கிடைக்கும் மூன்றாவது மற்றும்  இறுதி BREAK OUT  ஆகும், இந்த இடத்தில் தான் ROUNDING BOTTOM BUYING எனப்படும் செயல் ஜரூராக நடைபெறும், சரி CORRECTION மற்றும் ROUNDING BOTTOMஆகியவையின் படத்தினை பாருங்கள்    
PICTURE 1 NIFTY MOMENTUM TREND LINE

PICTURE 2 GENRALY CORRECTION STYLE


PICTURE 3 REAL NIFTY CORRECTIONS
 
PICTURE 4 ROUNDING BOTTOM BUYING BREAK OUT