பயில்வோம் பங்குசந்தை – 6

பயில்வோம் பங்குசந்தை – 6


        கடந்த இரண்டு வாரங்களாக OPEN, HIGH, LOW ஆகிய முக்கியமான புள்ளிகளை பற்றி பார்த்து வந்தோம் அந்த வகையில் இன்னும் மீதம் இருப்பது CLOSE என்ற புள்ளி அதனை பற்றி இப்பொழுது பார்ப்போம். CLOSE பற்றி பொதுவாக சொல்ல வேண்டுமானால் அன்றைய தினம் மாலை மணி 3.30 அளவில் அந்த பங்கு முடிவடைந்த புள்ளியாகும், இதனை வேறு ஒரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால் அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு என்ன விதமான உயர்வுகளையும், என்ன விதமான வீழ்ச்சிகளையும் பெற்றிருந்தாலும் கடைசியில் ஆடி அடங்கும் புள்ளியாகும்.
அன்றைய தினம் ஒரு பங்கு வர்த்தக நேரத்தில் எவளவு தூரம் உயர்ந்திருந்தாலும் சரி, எவளவு தூரம் கீழே வீழ்ந்து இருந்தாலும் சரி அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வுகளை தீர்மானிப்பதில் இந்த CLOSE புள்ளியின் பங்கு முக்கியமானதாகும், அதாவது விளக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு பங்கு அன்றைய தினம் கிட்ட தட்ட நேற்றைய முடிவு விலையில் இருந்து 15% OR 20% சதவிகிதம் உயர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படி இருக்கும் போது அன்றைய தினத்தின் அந்த பங்கின் முடிவு விலை, அன்றைய HIGH புள்ளியின் அருகில் முடிந்து இருந்தால், நாம் கீழ் கண்ட வகையில் அந்த பங்கின் அடுத்த நாள் நகர்வை பற்றி ஒரு 50% அளவிற்கு ஒரு முடிவுக்கு வரலாம்
(மேலும் 50% இன்னும் அநேக விசயங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும் அவைகளை பற்றி பின்னால் விளக்கமாக பார்ப்போம்), அதாவது நேற்றைய முடிவில் இருந்து அந்த பங்கு 15% க்கு மேல் உயர்ந்து இருந்தாலும் இன்னும் அதன் உயரும் சக்தியை தக்க வைத்துக்கொண்டுள்ளதாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் அதாவது 15% TO 20% உயர்ந்து இருந்தாலும் அந்த பங்கை முழு வீச்சில் விற்று லாபம் பார்க்க யாரும் விரும்பவில்லை என்றும் இன்னும் அதிக தூரம் உயரும் வாய்ப்புகள் இருப்பதினால் அந்த பங்கில் PROFIT BOOKING வரவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம், ஆகவே இன்னும் சில விஷயங்கள் உறுதுணையாக (GLOBAL MARKET, OUR MARKET, மேலும் சில சாதகமான விஷயங்கள்) இருக்கும் சூழ்நிலை வந்தால் அந்த பங்கு அடுத்த நாள் GAP UP என்ற முறையில் துவங்கும்,
அதே நேரம் அந்த குறிப்பிட்ட பங்கு முன்னர் சொன்னது போல ஒரு 15% to 20% உயர்ந்து, அந்த உயரங்களில் தாக்கு பிடிக்க முடியாமல் அதிக அளவு கீழே வந்தால் அதாவது எந்த புள்ளியில் அன்றைய தினம் அந்த பங்கு வர்த்தகத்தை தொடங்கியதோ அந்த புள்ளிக்கோ அல்லது அதன் வெகு அருகிலோ நல்ல VOLUME உடன் கீழே இறங்குகிறது என்ற சூழ்நிலை வந்தால் நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது அந்த பங்கின் தொடர் உயர்வில் சந்தேகம் ஏற்ப்பட்டு சிலர் லாபம் பார்க்கும் நோக்கத்தில் அந்த பங்கின் உயர்வை சாதகமாக்கி விற்று விட்டனர் என்று எடுத்துக்கொள்ளலாம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அந்த பங்கு அடுத்தநாள் தொடர்ந்து உயரும் என்று அடித்து சொல்ல முடியாது
(இப்பொழுது கீழே வந்தாலும் தொடர்ந்து உயரும், இல்லை இல்லை தொடர்ந்து கீழே தான் வரும் என்று முடிவு செய்வதற்கு TECHNICAL ஆக வேறு சில விஷயங்கள் உள்ளது, இன்னும் உள்ளே போகும் போது அவற்றை பற்றி பார்ப்போம்), இது போன்ற சூழ்நிலைகள் வரும்போது அடுத்த நாள் இந்த பங்கில் உயர்வுகள் இருக்கலாம் என்று எண்ணி அந்த பங்கில் நாம் தொடர்ந்து இருப்பது சிறந்ததாக இருக்காது (இந்த CLOSE என்ற புள்ளியின் மூலம் நாம் என்ன என்ன தெரிந்து கொள்ளலாம் என்பதை கூறிவருகிறேன், அதாவது இங்கு கூறுவது TECHNICAL ஆக ஒரு பங்கை பற்றி 100% முடிவுக்கு வருகிறோம் என்று வைத்துக்கொண்டால் அந்த 100% இல் இந்த CLOSE புள்ளியும் சிலவகை முடிவுகளை எடுக்க உதவி செய்யும் அதாவது இந்த CLOSE புள்ளி ஒரு 10% அல்லது 20% தன் பங்குக்கு உதவி செய்யும் என்று சொல்ல வருகிறேன்),
ஆகவே இந்த CLOSE புள்ளி அன்றைய தின HIGH புள்ளிக்கு அருகில் முடிவடைந்தால் அடுத்த நாள் தொடக்கம் சில உயர்வுகளுடனும், அதே போல் நன்றாக உயர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கு அருகில் முடிந்தால் அடுத்த நாள் தொடர் உயர்வுகள் இருப்பது சத்தியம் இல்லை என்று நாம் எடுத்துக்கொள்ளலாம், இன்னும் இந்த புள்ளிகளை வைத்து அடுத்த நாள் எப்படி தொடங்குகிறது என்று நீங்கள் சோதனை செய்து வந்தீர்களேயானால் இன்னும் அநேக விசயங்களை நீங்கள் உணர முடியும், இங்கு அதிக விசயங்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆனால் குழப்பத்தை தான் தரும், மேலும் இங்கு சொல்லி வருவது CLOSE புள்ளியின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்த தான்……
சரி CLOSE என்ற புள்ளியை பற்றியும் பார்த்தாகிவிட்டது, அடுத்து இவைகளை மொத்தமாக பார்த்து விடுவோம்
சரி கடந்த இரண்டு வாரமாக OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளின் முக்கியத்துவத்தை பற்றி பார்த்துவந்தோம், இந்த விசயங்களை மனதில் கொள்ளுங்கள், மேலும் இந்த புள்ளிகளை நீங்கள் பார்த்த உடன் அந்த பங்கின் அன்றய தின நகர்கள் எப்படி இருக்கும் என்பது உங்கள் மனதில் ஓடவேண்டும், ஒரு 50% அளவிற்காவது உங்களுக்கு அந்த பங்கின் அடுத்த நாள் நகர்வுகளை அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும், தொடர்ந்து இதை குறித்துக்கொண்டு அடுத்த நாள் என்ன மாதிரி நடக்கிறது என்று பார்த்து வந்தீர்களானால் உங்களுக்கு பயிற்ச்சி ஏற்ப்பட்டுவிடும் இந்த செயல் உங்களுக்கு பின்னால் உதவியாக இருக்கும்,
இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்து அந்த பங்கின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் எப்படி எல்லாம் ஒரு அனுமானத்திற்கு வரலாம் என்பதை பற்றி ஒரு சில விசயங்களை பார்ப்போம், அதாவது ஒரு பங்கின் முதல் நாள் வர்த்தகத்தில் அந்த பங்கானது முதல் நாள் முடிவடைந்த விலையின் அருகிலேயே தொடங்கி ஒரு 5% சதவிகிதம் உயர்ந்து மறுபடியும் OPEN ஆனா விலையை விட கீழே சில புள்ளிகளை இழந்து மறுபடியும் உயர்ந்து HIGH புள்ளியின் அருகில் CLOSE ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்,
இது போன்ற சூழ்நிலையில் அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வுகள் எப்படி இருக்கலாம் என்று நாம் கீழ்கண்ட மாதிரி ஒரு அனுமானத்திற்கு வரலாம் அதாவது, அந்த பங்கின் OPEN புள்ளி நேற்றைய CLOSE புள்ளியின் அருகிலேயே தொடங்கியுள்ளது மேலும் ஒரு நல்ல உயர்வை நல்ல VOLUME உடன் அடைந்துள்ளது, மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் OPEN ஆனா விலைக்கு கீழே வந்தாலும் மறுபடியும் தொடர்ந்து உயர்ந்து அன்றைய தின HIGH புள்ளியின் அருகிலே முடிந்து இருப்பது அந்த பங்கின் தொடர் உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்,
அதே நேரம் அந்த பங்கு உயரத்தில் இருந்து கீழே வந்தபொழுதும் அந்த பங்கில் அதிகமானோர் விருப்பத்துடன் வாங்கி இருப்பது TRADER களிடமும் SWING TRADER களிடமும் அந்த பங்குக்கு இருக்கும் தேவை, போட்டி ( DEMAND), ஆகியவைகள் அதிகமாக இருப்பதாக கொள்ளலாம் ஏனெனில் உயரத்தில் இருந்து OPEN விலைக்கும் கீழே வந்து இருந்தாலும் மறுபடியும் அந்த பங்கு அந்த HIGH புள்ளியின் அருகில் செல்லும் வரை அந்த பங்கை மல்லுகட்டி வாங்கி இருப்பதினால் அந்த பங்கின் மீது சிலர் ஆர்வமாக இருப்பதாக தானே அர்த்தம்
அப்படி இருக்கும் சூழ்நிலையில் TECHNICAL ஆக சில விஷயங்கள் துணையாக இருந்தால் இந்த பங்கில் தைரியமாக வாங்கலாம் கண்டிப்பாக அந்த பங்கில் உயர்வுகள் இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வரலாம், மேலும் அந்த பங்கு அடுத்த நாள் கீழே வந்தால் அதன் ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கிப்போடலாம் இரண்டு மூன்று தினங்களில் லாபம் நல்லவிதத்தில் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு அனுமானத்திற்கு வரலாம், மேலும் இந்த பங்கில் வர்த்தகம் தொடங்கினால் அதன் S/L ஆக முதல் நாள் LOW புள்ளியை கீழே கடந்து சென்றால் மேலும் கீழே வரும் வாய்ப்புகள் இருப்பதாக கொண்டு அந்த பங்கில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று ஒரு அனுமானத்திற்கு வரலாம்,
மேலும் இன்னும் சில விஷயங்கள் நாம் பார்க்க வேண்டும் அது முழுவதுமாக TECHNICAL வகுப்புகள் முடிந்தவுடன் உங்களுக்கு எந்த எந்த விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம் இப்பொழுது இதனை பார்ப்பது தவறாக வரும், ஆகவே இந்த விசயங்களை நல்ல பயிற்ச்சி செய்யுங்கள் வர வர இன்னும் உதவியாக இருக்கும், அதே போல் ஒரு பங்கு நல்ல உயர்ந்து மேலே தாக்கு பிடிக்க முடியாமல் OPEN விலைக்கும் கீழே வந்து CLOSE ஆனால் என்ன நடக்கும் என்று நீங்கள் யோசித்து பாருங்கள், மேலும் நீங்கள் யோசித்தது போல அடுத்த நாள் நடக்கின்றதா இல்லை மாறுபாடுகள் வருகிறதா என்று பாருங்கள்..
மாறுபாடுகள் வந்தால் அவைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்ன தவறு என்பதை யோசியுங்கள் அல்லது உங்கள் வர்த்தக நண்பர்களுடன் கலந்தாலோசியுங்கள் அல்லது எனக்கு மின்அஞ்சல் செய்யுங்கள், இப்படியே நீங்கள் பயிச்சி செய்வீர்களே ஆனால் இன்றைய சந்தையின் அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு 50% அளவிற்காவது இந்த OPEN, HIGH LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே ஒரு அனுமானத்திற்கு வந்து விடலாம் மீதியை TECHNICAL துணையுடன் சாத்தியமாக்கிக் கொள்ளலாம், ஆகவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தொடர்ந்து பயிற்ச்சி செய்யுங்கள்………..
சரி அடுத்த வாரம் வேறொரு முக்கியமான விசயங்களுடன்

text=adstext=ads