பயில்வோம் பங்குச்சந்தை - 9

பயில்வோம் பங்குச்சந்தை - 9

           
கடந்த வாரம் CANDLESTICK CHART உருவங்களை பற்றி பார்த்து வந்தோம் மேலும் CANDLESTICK CHART உருவங்களை எளிதாக புரிந்து கொள்ள அதன் வண்ணங்களை பயன்படுத்தி அறியலாம் என்றும், அந்த வண்ணங்கள் பச்சை மற்றும் சிகப்பு என்ற இரண்டு நிறத்தில் இருக்கும் என்றும், இதில் பச்சை நிறம் சந்தையில் ஏற்ப்பட்ட உயர்வையும், சிகப்பு நிறம் சதையில் ஏற்ப்பட்ட வீழ்ச்சியையும் குறிக்கின்றது என்றும் பார்த்தோம்,
மேலும் இந்த வண்ணங்களின் உதவி கொண்டு நாம் CHART படங்களை பார்க்கும் போது அந்த இரண்டு வண்ணங்களில் இரண்டு வேறுபாடுகளை காணலாம் என்றும், அவைகள் EMPTY GREEN, SOLID GREEN மற்றும் EMPTY RED, SOLID RED என்று இரண்டு வகையாகும் என்றும் கடந்த வாரம் பார்த்தோம்,
தற்பொழுது இந்த வண்ணங்களான EMPTY GREEN, SOLID GREEN, EMPTY RED, SOLID RED என்பவை எப்படி தனக்குள் உள்ள வேறுபாடுகளை வெளிக்காட்டுகிறது என்று பார்ப்போம், (இங்கு நான் சொல்லி வருவது எல்லாம் அடிப்படை விஷயங்கள் இந்த விஷயங்கள் உங்களுக்கு அனிச்சை செயல் போல் CHART பார்த்த மாத்திரத்தில் புரிந்து விட வேண்டும், ஆகவே புரியும் வரை திரும்ப திரும்ப படித்து பார்த்து புரிந்து கொண்டு பின் மேலே தொடருங்கள் நான் முன்பே சொன்ன மாதிரி முதலில் சற்று கடினமாக இருக்கும் பிறகு எளிதாகி விடும், ஆகவே வரும் வரை விடாதீர்கள்),
முதலில் இங்கு நான் கொடுத்துள்ள EMPTY GREEN, SOLID GREEN, EMPTY RED, SOLID RED என்ற வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று கீழே உள்ள படம் 1 ஐ பாருங்கள்,
படம் 1 (படங்களைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மேல் அழுத்தவும்)


பார்த்து விட்டீர்களா, சரி இப்பொழுது இந்த வண்ணங்கள் எப்படி தனது நிறத்தில் வேறு பாடுகளை காட்டுகிறது என்று புரிகிறது அல்லவா, சரி அடுத்து நாம் CHART ஐ பார்க்கும் போது இந்த வண்ணங்களில் வேறுபாடுகள் இருந்தால் அதற்க்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம்,
EMPTY GREEN:-
EMPTY GREEN என்பது அன்றைய வர்த்தகம் தொடங்கிய புள்ளியில் இருந்து உயர்ந்து அந்த புள்ளிக்கும் மேலே முடிவடைவது

SOLID RED:-

SOLID RED என்பது அன்றைய வர்த்தகம் தொடங்கிய புள்ளியில் இருந்து வீழ்ச்சி அடைந்து அந்த புள்ளிக்கும் கீழே முடிவடைவது
SOLID GREEN:-
< பொதுவாக EMPTY GREEN என்றால் OPEN புள்ளியை விட உயர்ந்து முடிவடைவது என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இந்த SOLID GREEN என்பது தொடங்கிய புள்ளியில் இருந்து உயராமல் கீழே வந்து முடிவடைந்து இருப்பது, இதன் படி இந்த மாதிரி முடிவடைந்ததை நாம் SOLID RED என்று தான் சொல்லுவோம் ஆனால் நான் ஏன் SOLID GREEN என்று சொல்கிறேன் என்று பார்ப்போம்
அதாவது இவ்வாறு இறங்கி முடிவடைந்து இருந்தாலும் முதல் நாள் ஏற்ப்பட்ட அந்த பங்கின் CLOSE புள்ளியை விட இன்று நடந்த CLOSE புள்ளியானது உயரத்தில் இருப்பது அதாவது முதல் நாள் CLOSE புள்ளிக்கு மேலே முடிந்து இருந்தால் நாம் SOLID RED என்ற வண்ணத்தில் காணாமல் SOLID GREEN என்ற வண்ணத்தில் காண்கின்றோம், இதற்க்கு அர்த்தமாக நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம்,
அதாவது அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் அந்த பங்கு முதல் நாள், தான் முடிவடைந்த விலையை விட கீழே செல்லாமல் அந்த விலைக்கு மேல் முடிவடைந்து இருக்கின்றது என்று அர்த்தம், இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் சந்தையில் நடக்கும் ஒரு நிகழ்வின் மூலம் சொல்லலாம் எளிதாக புரியும், அதாவது GAP UP OPEN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் கீழே இறங்கி வந்து முடிவு மட்டும் (CLOSE) முதல் நாள் CLOSE புள்ளிக்கு மேல் முடிவது (எல்லா SOLID GREEN என்ற உருவமும் இந்த மாதிரி தான் GAP UP முறையில் இருக்கும் என்று சொல்ல வில்லை உங்களுக்கு எளிதாக புரிய வேண்டுமே என்று சொல்கிறேன்)
இதன் படி அந்த பங்கு அடுத்த நாட்களில் இன்றைய HIGH புள்ளியை மேலே கடக்குமானால் தொடர்ந்து உயரும் என்று எடுத்துக்கொள்ளலாம், LOW புள்ளியை கீழே கடக்குமானால் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம் (இதற்க்கு இன்னும் சில விஷயங்கள் உதவி செய்ய வேண்டும் அதை பிறகு பார்ப்போம்), புரிகிறதா புரியவில்லை என்றால் மறுபடி மறுபடி படியுங்கள், இல்லையேல் எனக்கு உங்கள் சந்தேகங்களை மின் அஞ்சல் செய்யுங்கள்,
சரி அடுத்து EMPTY RED என்ற நிறத்தை பற்றி பார்ப்போம்
பொதுவாக SOLID RED என்றால் OPEN புள்ளியை விட கீழே இறங்கி வீழ்ச்சியடைந்து முடிவடைவது என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இந்த EMPTY RED என்பது தொடங்கிய புள்ளியில் இருந்து வீழ்ச்சியடையாமல் மேலே உயர்ந்து முடிவடைந்து இருப்பது, இதன் படி இந்த மாதிரி முடிவடைந்ததை நாம் EMPTY GREEN என்று தான் சொல்லுவோம், ஆனால் நான் ஏன் EMPTY RED என்று சொல்கிறேன் என்று பார்ப்போம்
அதாவது இவ்வாறு உயர்ந்து முடிவடைந்து இருந்தாலும் முதல் நாள் ஏற்ப்பட்ட அந்த பங்கின் CLOSE புள்ளியை விட இன்று நடந்த CLOSE புள்ளியானது கீழே இறங்கி முடிவடைந்து இருப்பது, அதாவது முதல் நாள் CLOSE புள்ளிக்கு கீழே முடிந்து இருந்தால் நாம் EMPTY GREEN என்ற வண்ணத்தில் காணாமல் EMPTY RED என்ற வண்ணத்தில் காண்கின்றோம்,
இதற்க்கு அர்த்தமாக நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு உயர்வை அடைந்து இருந்தாலும் அந்த பங்கு முதல் நாள், தான் முடிவடைந்த விலையை விட கீழே சென்று, அந்த விலைக்கும் கீழ் முடிவடைந்து இருக்கின்றது என்று அர்த்தம் இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் GAP DOWN OPEN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து முன்னேறி வந்து முடிவு மட்டும் (CLOSE) முதல் நாள் CLOSE புள்ளிக்கு கீழ் முடிவது (எல்லா EMPTY RED என்ற உருவமும் இந்த மாதிரி தான் GAP DOWN முறையில் இருக்கும் என்று சொல்ல வில்லை உங்களுக்கு எளிதாக புரிய வேண்டுமே என்று சொல்கிறேன்)
text=adstext=ads