சிவனின் காரியம்
1. உலக உற்பத்தி : ‘சிவ-பார்வதியை ‘ஜகத: பிதரெள’, அதாவது உலகத்தின் தாய்-தந்தை எனக் கூறுகிறோம். உலக சம்ஹாரத்திற்கு பிறகு புதிதாக உலக நிர்மாணத்திற்கான சூழலை சிவனே உருவாக்குகிறார்.
2. ஜகத்குரு : ‘ஞானம் மகேஸ்வராத் இச்சேத்; மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத்’. அதாவது சிவனிடமிருந்து ஞானத்தையும் விஷ்ணுவிடமிருந்து மோக்ஷத்தையும் வேண்ட வேண்டும்.
3. தானும் சாதனை செய்து மற்றவரையும் ஆன்மீக முன்னேற்றம் அடைய செய்தல் : ‘சிவன், வடக்கு திசையிலுள்ள கைலாசத்தில் தியானத்தில் இருந்து கொண்டே உலகனைத்தையும் பரிபாலிக்கிறார். அதாவது தானும் சாதனை செய்து மற்றவரின் ஆன்மீக முன்னேற்றமும் நடக்கும்படி செய்கிறார்.’
4. காமதகனம் என்பது சித்ததிலுள்ள காமம் ஆகிய தோஷங்களை அழிப்பது : ஒரு 4 அல்லது 5 வயது பாலகன் ஒரு வலிமையான இளைஞனுடன் சண்டை போடவே முடியாது. அதே போல் சிவனின் வலிமைக்கு முன்னாள் காமனால் நிற்க முடியாது.
5. ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி : நம் உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விஷுத்தி, ஆக்ஞா என்பவை ஆறு சக்கரங்களாகும். குண்டலினி சக்தியின் பிரயாணம் இந்த சக்கரங்கள் வழியாக நடந்து சஹஸ்ரார சக்கரத்தை அடைகிறது. ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு தெய்வத்தோடு சம்பந்தப்பட்டது. உதா. மூலாதாரம் – கணபதி, ச்வாதிஷ்டான் – தத்த. அந்தந்த தெய்வம் அந்தந்த சக்கரத்தின் அதிபதி ஆவார்கள்.
சிவன், ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி ஆவார். சிவனே ஆதிகுரு. குருசேவையில் ஈடுபடும் சிஷ்யனுக்கு ‘கீழ்படிதல்’ என்பது முக்கிய குணமாகும். இக்கண்ணோட்டத்தில் ஆக்ஞா சக்கரத்திலுள்ள சிவனின் ஸ்தானம், ஒரு விதத்தில் சிவனின் குருத்வத்திற்கு சாட்சியாக உள்ளது. சிவனின் நெற்றிக் கண் உள்ள இடமும் அதுவே.
6. ம்ருத்யுன்ஜயன் : மகாதேவனை சோமதேவன் எனவும் கூறுவர். தெற்கு திசையின் அதிபதி யமனாகும். இவன் மரண தேவனும் கூட. சோம தேவனான ம்ருத்யுன்ஜயன் வடக்கு திசையின் அதிபதியாவார். சிவலிங்கம் பொதுவாக வடக்கை நோக்கியே இருக்கிறது. யமனே மயானத்தின் சுவாமியாக இருந்தாலும், மயானத்தில் இருந்து கொண்டு கபாலமாலையை தரித்து தியானத்தில் அமர்ந்தவர் சிவன் ஆகும். ஜீவன் சாதனையின் மூலம் அக்னிதத்துவம், யமன், வருணன் மற்றும் வாயுதத்துவத்தை கடந்து ம்ருத்யுஞ்சயனாகிய சிவ தத்துவத்தை அடைகின்றனர். அப்பொழுது சிவன், அந்த ஜீவனுக்கு அபயமளித்து சிவதத்துவத்தை வழங்குகிறார். அச்சமயம், ஜீவமும் சிவனும் ஒன்றாகின்றனர்.’
- பரம் பூஜ்ய பாண்டே மகாராஜ், சனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல்.
text=adstext=ads