அம்பாள் ஸ்தோத்திரம்

மாதங்கி, உன்னை நான்
மனமுடன் மொழிகளால்
மெய்யுடன் மலர்களால்
சுத்தித்துத் துதி செய்தி
வணங்கியே பூஜிக்க
வரமெனக் கருள்புரிவாய்
வழி வேறில்லையம்மா,
வல்வினைகள் விலகவே
அம்புலி சுந்தரி,
ஆனந்த வடிவமே,
அம்புலி யணிபவர்
முகமலர்ப் பானுவே,
பாபமா மிருளினைப்
போக்கிடும் ஜோதியே
காத்தருள் சங்கரீ,
கருணையின் பெருக்கமே
கௌரி மனோகரி
சங்கரீ, சாம்பவீ,
சம்புவின் மோஹீனீ,
பூர்ண மாமம் மதிதனைப்
பழித்திடும் நின் முகம்
இளம்வெயில் நிற ஆடையுடன்
சுவர்ண நிற ஆடையுடன்
கண்டதால் அல்லவோ
காமனை வென்றவர்
திரும்பினார் இவ்வழி
தேவர்கள் மகிழவே.
கந்தனைப் பெற்றதாய்
கல்பக விருக்ஷமே,
கந்தனைப் போலவே
கருணையா லுலகினைக்
காத்திடு முன்னையே
காத்தரு ளென்றுநான்
கேட்டலும் வேண்டுமோ
கௌரீ நீ சொல்லுவாய்
அம்மை அன்னை நீ அம்பிகே
பிதாவும் பார்வதி.
அம்பான பிறப்பும் நீ
ஆனந்த வடிவமே சொரூபமே
ஆயுளோ டைசுவரியம்
நீ உனையின்றி வேறில்லை.
என்றுநா னுன்னையே
எண்ணவும் அருள்புரி
சூரியனைப்போல் விளங்கும்
ஸ்ரீ சக்ர மத்தியினில்
ஆனந்த முகத் தினராய்
ஆயுதங்கள் அபயமுடன்
அம்பிகே! உனைநினைத்தேன்
அருள்புரிவாய் எந்தனுக்கு
இந்திராதி தேவரும்
ஸனகாதி முனிவரும்
காண்பதுவும் அரிதான
கல்யாணி யுன்வடிவைக்
காண்பதற்கு வழி யான்றே
காணாது வேறுவழி
யில்லாமல் மாதர்களை
மாதாவாய் எண்ணுவதே.
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே கௌரீ
நாராயணீ நமோ அஸ்துதே
ஆயுர்தேஹி தனம்தேஹி
வித்யாம் தேஹி மஹேச்வரீ
ஸமஸ்தம் அகிலாம் தேஹி
தேஹி மே பரமேச்வரீ
ஸ்ர்வ மங்கள தாயிந்யை நம:
வெள்ளிக்கிழமை விளக்கேற்றி
வேண்டுகின்றேந் தாயே,
வேண்டுவன தருவாயே,
வேதமுரைக்கும் நாயகியே!
சிரத்தையுடன் உனை நினைந்து
செவி குளிர பாடிடுவேன்,
நல் நினைவும், நற்புத்தியும்
நான் பெறவே அருள்வாயே!
நம்பிக்கையோடு உன்னை
நான் பணிந்து நிற்கின்றேன்
நம்பிக் கை கொடுப்பாய்
எனைக் காக்கும் என் தாயே!
என் கனவிலேனும் நீ தோன்றி
உன் மலர் முகத்தைக் காட்டிடுவாய்.
கண்டதும் என் பிணி தீரும்
கவலை எங்கோ ஓடி விடும்.
text=adstext=ads