ப்ரஹஸ்பதி

ஸ்வர்ணாஸ்வரதமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதம்
மேரோ: ப்ரதக்ஷிணம் ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம்
அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸதா
(ப்ரம்ம வைவர்த்திக புராணத்தில் உள்ள
ப்ரஹஸ்பதி கவசம்)

பொதுப்பொருள்:

மஞ்சள் வண்ணக் கொடி பறந்து பட்டொளி வீச, தங்கம் போல ஜொலிக்கும் குதிரைகள் இழுக்கும் ரதத்தில் ஆரோகணித்திருப்பவரே, பிரஹஸ்பதி என்ற குரு பகவானே, நமஸ்காரம். மேரு மலையை வலம் வருகிறவரே, பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்பவரே, தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே, ப்ரஹஸ்பதி பகவானே, நமஸ்காரம்.

text=adstext=ads