எழுத்துக்களின் உருவாக்கம்

எழுத்துக்களின் உருவாக்கம்  பேச்சு வழக்கை மொழி என்று கூறினர். அந்த மொழியை தொடர்ந்து எழுத்து உருவானது. இந்த எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. கி.மு.4000-ம் ஆண்டுகளிலேயே களிமண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து தனிப்படுத்தி ஒவ்வோர் எழுத்துக்கும் தனிக் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. காகிதம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக்களி மண்ணைப் பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன் ஈரக் களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவார்கள். அது கீழே விழுந்து உடைந்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சென்று சேர்க்கவேண்டும். அதைப் பெற்றுக்கொண்டவர் லேசாக தட்டி உதிர்த்தால் போதும் உள்ளே உள்ள தகவலைப் படிக்கலாம். ஆயிரக்கணக்கான குறியீடுகளை களிமண்ணில் எழுத கல்வியறிவு தேவைப்பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், அரசியல், மருத்துவம் போன்ற விஷயங்கள் குறித்து தனித்தனி பயிற்சியும் அளிக்கப்பட்டது. எழுத்து என்பது இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழுவடிவம் பெற 800 ஆண்டுகள் ஆயின. மொழி மனிதனின் கைவசப்பட்டவுடன் அடுத்த கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு.2000-ல் பாபிலோனியர்கள் எழுதிய சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர்கள் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பழமொழிகளைக் கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் அழகு நிலையம் என்று ஒன்றிருந்தால் அங்கு கிசுகிசுவும் கூடவே இருக்கும் என்ற பழமொழி கிடைத்திருக்கிறது. இன்றளவும் பின்பற்றப்படும் ‘வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது’ என்ற பழமொழியும் கூட களிமண் குறிப்பில் இருந்து பெற்றதுதான்.

.

Popular posts from this blog

Tamilnadu SIXTH all books free download, Tamilnadu 6th all books free download

Tamilnadu FIRST STANDARD all books free download, Tamilnadu 1ST STANDARD all books free download

.