.

பன்றி இனங்கள்


              வெண்பன்றி வளர்ப்பு குறித்த தகவல்களின் தொடர்ச்சியை இங்கே காணலாம்.
             டாம்வொர்த்:- டாம்வொர்த் இனம் இங்கிலாந்தின் டாம்வொர்த் என்ற இடத்தில் தோன்றியதாகும். தலைப்பகுதி நீண்டும், நீண்ட மூக்கும், சிறிய தோள்பட்டையும், உடலின் மேல் சற்று அடர்ந்த முடிகளையும் கொண்டதாகும்.
     டியூராக்:- இந்த இனம் செந்நிறமானவை. பொன்னிற மஞ்சள் முதல் மிகச் சிவப்பு நிறம் வரை வேறுபாடு காணப்படும். இந்த இனம் இறைச்சி உற்பத்திக்கு மிகவும் சிறந்தது. பெண் பன்றிகள் அதிக அளவில் பால் கொடுத்து சிறந்த முறையில் குட்டிகளை பராமரிக்கும் குணம் கொண்டவை. குட்டிகள் சிறந்த தீவன மாற்றுத் திறனுடன் வளர்ச்சியடையக் கூடியவை. கலப்பின பெருக்கத்தில் இவ்வினம் பயன்படுத்தப்படுகிறது.
       இவ்வினத்தை தவிர செஸ்டர் ஒயிட், போலண்ட், சைனா, ஸ்பாட்டட் போலண்ட் சைனா மற்றும் அமெரிக்கன் லேண்ட்ரேஸ் இனங்களும் மேலைநாடுகளில் உள்ளது.
தேர்வு செய்யும் முறைகள்
சிறந்த இனப்பெருக்க குணாதிசயங்களுடைய பன்றிகளை கீழ்காணும் முறையில் தேர்வு செய்யலாம்.
1. தனிப்பட்ட பன்றியின் உற்பத்தி திறன்
2. மூதாதையரின் குணாதிசயங்கள்
3. சந்ததிகளின் குணாதிசயங்கள் போன்றவை ஆகும்.
(தொடர்ச்சி நாளை வரும்)

.

Popular posts from this blog

Tamilnadu SIXTH all books free download, Tamilnadu 6th all books free download

TAMIL NADU Seventh MATHEMATICS, SCIENCE AND SOCIAL SCIENCE BOOK FREE DOWNLOAD | TAMIL NADU 7TH MATHEMATICS, SCIENCE AND SOCIAL SCIENCE BOOK FREE DOWNLOAD