.

காய்கறிகளின் முக்கியத்துவம்

காய்கறிகளின்  முக்கியத்துவம்           காய்கறி தோட்டம் குறித்த தகவல்களின் தொடர்ச்சியை பார்ப்போம்.
சமச்சீர் உணவில் தினசரி நாம் 85 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதால் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்துவதுடன், குடும்பத்துக்கு தேவையான புத்தம் புதிய காய்கறிகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்து கொள்ளலாம். இதனால் சுற்றுச்சூழலும் மேம்பட காய்கறி தோட்டம் உதவுகிறது.


             இயற்கையிலேயே கிடைக்கும் தொழு உரங்கள், கழிவுப்பொருட்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் இவற்றைப் பயன்படுத்தி தரமான, சத்து நிறைந்த பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும். வீட்டு காய்கறி தோட்டத்தில் உற்பத்தியை பெருக்குவதற்கு, ஊடுபயிர் சாகுபடி, தொடர் பயிர் திட்டம், பயிர் சுழற்சி, பல அடுக்கு பயிர் திட்டம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
உயர் விளைச்சல் தரும் புது ரகங்களையும் பயிரிட வேண்டும். காய்கறி தோட்டம் அமைப்பதற்கு போதுமான நிலம் இல்லாத பட்சத்தில், தொட்டிகளிலும், காலி பெட்டிகளிலும் தேவையான காய்கறிகளை பயிரிட்டு பயனடையலாம். உயிர்ச்சத்து ஏ நிறைந்த கேரட், கீரை வகைகள், உயிர்ச்சத்து சி நிறைந்த தக்காளி, கத்தரி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
(தொடர்ச்சி நாளை வரும்)

.

Popular posts from this blog

Tamilnadu SIXTH all books free download, Tamilnadu 6th all books free download